Latest News :

ஜீ தமிழியின் புது முயற்சி! - சினிமா விருதில் வித்தியாசம்

efd40c9a807f6e4757282abebbb183b6.jpg

தமிழ் தொலைக்காட்சிகள் பல சினிமா நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு ஆண்டு தோறும் விருதுகள் வழங்கி கெளரவிக்கிறது. அந்த வகையில், ஜீ தமிழ் தொலைக்காட்சியும் தமிழ் சினிமா கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு விருதுகள் வழங்க உள்ளது.

 

அதன்படி, 2019 ஆம் ஆண்டு வெளியான படங்களில் சிறந்த படங்கள், சிறந்த நடிகர், நடிகைகள், இயக்குநர்கள், ஒளிப்பதிவாளர் உள்ளிட்ட ஏராளமான பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்க உள்ளது. இந்த விருது வழங்கும் நிகழ்ச்சி வரும் 2020 ஆம் ஆண்டு, ஜனவரி 4 ஆம் தேதி, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது.

 

இதற்காக இயக்குநர்கள் கெளதம் மேனன், கரு.பழனியப்பன், பாரத் பாலா, நடிகையும் இயக்குநருமான சுஹாசினி, திரைப்பட விமர்சகர் பரத்வாஜ் ரங்கன் ஆகியோர் நடுவர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். விருது போட்டியில் பங்கு பெறும் படங்களில் இருந்து விருதுக்குரிய படங்களை இந்த ஐந்து பேர் கொண்ட குழு தான் தேர்வு செய்யும். தொலைக்காட்சியின் தலையீடு இதில் இருக்காதாம்.

 

மேலும், தென்னிந்திய சினிமாவில் தமிழை தவிர பிற மொழி சினிமாக்களில் உள்ள நடிகர்களில், தமிழ் ரசிகர்களிடம் யார் பிரபலமாக இருக்கிறார்கள், என்பதை மக்களிடம் கேட்டு அவர்களுக்காக தனி விருது ஒன்றும் வழங்கப்பட உள்ளது. அதே போல், பிற மாநிலங்களில் எந்த தமிழ் சினிமா நடிகர்கள் பிரபலமாக இருக்கிறார்கள், என்பதை அந்த அந்த மாநில மக்களிடம் வாக்கெடுப்பு நடத்தி, பிற மாநிலத்தில் பிரபலமாக இருக்கும் தமிழ் நடிகர் என்ற விருதும் வழங்கப்பட இருக்கிறார்கள். இந்த விருது நடிகைகளுக்கும் உண்டு. இதுபோன்ற விருதை இதுவரை யாரும் வழங்கியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

இப்படி விருது வழங்குவதையே வித்தியாசமான முறையில் அணுகும் ஜீ தமிழ் தொலைக்காட்சி, இனி ஒவ்வொரு ஆண்டும் இவ்விருது வழங்கும் விழாவை நடத்துவதோடு, எதிர்காலத்தில் இதுவரை விருது வழங்கப்படாமல் இருக்கும் சினிமாவில் உள்ள பிற துறைகளுக்கும் விருது வழங்கவும் திட்டமிட்டுள்ளதாம்.

 

இந்த தகவல்களை இன்று நடைபெற்ற ஜீ தமிழ் சினிமா விருதுகள் பத்திரிகையாளர் சந்திப்பில், ஜீ தமிழ் தொலைக்காட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர். இதில், விருது தேர்வு குழுவினர்களான நடிகை சுஹாசினி, இயக்குநர்கள் கெளதம் மேனன், கரு.பழனியப்பன், பாரத் பாலா ஆகியோர் பங்கேற்க, சிறப்பு விருந்தினராக நடிகர் கார்த்தி கலந்துக் கொண்டு ஜீ தமிழ் சினிமா விருதை அறிமுகப்படுத்தி வைத்தார்.

Recent Gallery