நியூஸ்7' தொலைக்காட்சியில் இடம் பெறும் வழிகாட்டும் நிகழ்ச்சி 'மாண்புமிகு நீதியரசர்கள்' ஞாயிறு காலை 9.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
நம் நாட்டில் சட்டம் பற்றிய அறிவு மக்களிடம் குறைவாகவே இருக்கிறது. இப்படி ஒரு பிரச்சினை வந்தால் சட்டப்படி அதை எப்படி எதிர் கொள்வது என்பது தெரியாமல் இருக்கிறார்கள். அதற்கு வழிகாட்டும் ஒரு நிகழ்ச்சியாக இருப்பதுதான் 'மாண்புமிகு நீதியரசர்கள்'.
சட்டம் தெரியாததால் வரும் அச்சத்தையும் குழப்பத்தையும் போக்கும் நிகழ்ச்சியாக இது இருக்கும்.இரவல் பைக் எடுத்துச் செல்லும் போது மோதி விபத்தாகி விடுகிறது . இதனால் ஒருவர் இறந்து விடுகிறார் அப்போது இழப்பீடு எப்படிப் பெறுவது? சொத்து விவகாரத்தில் செட்டில் மெண்ட் என்றால் என்ன? உயில் என்றால் என்ன?இந்தக் கேள்விகளுக்கு ஒரு வழக்கை எடுத்துக் கொண்டு தியாகராஜன், மீனாட்சி சுந்தரம், நீலவேணி ,விஜயலஷ்மி என நான்கு வழக்கறிஞர்கள் தாங்கள் அணுகிய விதம் பற்றி, வெற்றி பெற்ற விதம் பற்றி விளக்குகிறார்கள்.
சொத்துப்பிரச்சினை, குற்ற வழக்கு, குடும்ப வழக்கு என இவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வழக்குவகை பற்றியும் கூறுகிறார்கள். இந்நிகழ்ச்சியை நெறியாளர் கோபாலகிருஷ்ணன் மக்களின் பார்வையிலான கேள்விகளோடு தொகுத்து வழங்குகிறார்.
இந்நிகழ்ச்சி ஞாயிறு காலை 9.30 மணிக்கும் நியூஸ்7' தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.