கிரிக்கெட்டில் மிகவும் புத்திக் கூர்மைமிக்கவர் என்று அஷ்வினைப் பற்றி அனைவரும் கூறுவார்கள். இந்தியாவின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான இவர் சூழ்நிலைகள் எதுவானாலும் அதை பொறுமையாக கையாளும் திறன் கொண்டவர். இவர் இந்தியாவிற்கு பல வெற்றிகளை பெற்றுத் தந்துள்ளார். இந்திய மற்றும் தமிழக கிரிக்கெட் வீரரான இவர் தன்னுடைய அறிவு மற்றும் அனைவரையும் அசரவைக்கும் நகைச்சுவைப் பேச்சுடன் 'ஆட்டத்துக்குரெடியா' எனும் கிரிக்கெட் குவிஸ் நிகழ்ச்சியில் ஒரு குவிஸ் மாஸ்டராக களம் இறங்க தயாராகிறார்.
இந்நிகழ்ச்சி தமிழகத்தில் உள்ள ஸ்போர்ட்ஸ் ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக அமையும். ஆகஸ்ட் 9 முதல் ஞாயிறு தோறும் பகல் 1 மணிக்கு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தமிழில் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகும்.
இந்த நிகழ்ச்சி குறித்து அஸ்வின் கூறுகையில், “எனக்கு குவிஸ் ன்றால் எப்போதும் உற்சாகம் தான். மேலும், தமிழ் நாட்டு மக்களிடம் அவர்கள் விரும்பும் கிரிக்கெட் விளையாட்டைப் பற்றி அவர்களிடமே கேள்விகள் கேட்கப் போகிறேன் என்பது மேலும் உற்சாகம் தருகிறது. அனைவரும் ரசித்துப்பார்க்கும் ஸ்டார்ஸ் போர்ட்ஸ் 1 தமிழ் சேனலில், மக்களுடன் கிரிக்கெட் மூலமாக இணைவது எனக்கு கிடைத்த ஒரு அரிய வாய்ப்பு. இதன் மூலம் இன்றைய இளைஞர்களுக்கு கிரிக்கெட் மீது இருக்கும் பற்றை நேரடியாக என்னால் உணர முடியும். சமூக வலைத்தளங்களில் நான் பல குவிஸ் போட்டிகளை தொகுத்து வழங்கியுள்ளேன். முதல் முறையாக ஒரு பிரபலாமான தமிழ் தொலைக்காட்சியில் ரசிகர்களை சந்திக்கப்போகிறேன். அதுவும் தமிழில் நடைபெறும் முதல் கிரிக்கெட் குவிஸ் இது தான் என்பது பெரிய விஷயம். நான் ஒன்று மட்டும் தான் போட்டியாளர்களுக்கு சொல்லவிரும்புகிறேன் - ஆட்டத்துக்கு ரெடியா?” என்றார்.
ரசிகர்கள் ற்றும் பார்வையாளர்களுக்கு மாபெரும் இறுதிச் சுற்றில் அஷ்வினிடம் அவர்கள் கிரிக்கெட் அறிவை நிரூபிக்க ஒருவாய்ப்பு காத்திருக்கிறது. இதற்கு முதலில் நீங்கள் இரண்டு பேர்கொண்ட அணியாக ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 2 வரை நடைபெறும் ஆரம்பச்சுற்றுகளில் வெற்றிப் பெற வேண்டும். ஆரம்பச் சுற்றுகளில் பங்கு பெற உங்கள் அணியை www.sstamilcricketquiz.com என்ற இணையதளத்தில் இப்பொழுதே சென்று ரெஜிஸ்டர் செய்யுங்கள். குவிஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்பவர்களுக்கு 1 லட்சம் மதிப்பிலான பரிசுகள் வெல்லும் வாய்ப்பு கிடைக்கலாம்.
போட்டியில் பங்குபெறும் முறை:
1. www.sstamilcricketquiz.com ல் ரெஜிஸ்டரேஷன் தற்போது நடைபெறுகிறது.
2. ஆரம்பச் சுற்றுகள் ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 2 வரை www.sstamilcricketquiz.com இணையதளத்தில் நடைபெறும்.
3. தேர்வு முறை : அதிக ஸ்கோர் பெறும் முதல் 8 ணிகள் ரவிச்சந்திரன் அஷ்வின் வரும் இறுதிச் சுற்றுக்கு முன்னேறுவார்கள்.
4. குவிஸ் நிகழ்ச்சி : ஆகஸ்ட் 9 முதல் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தமிழில் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும்.