தமிழகத்தின் மிக இளைய பொழுதுபோக்கு தொலைக்காட்சியான கலர்ஸ் தமிழ், மர்மங்கள் நிறைந்த கதை நிகழ்வுகளின் வழியாக ஆர்வத்தையும், எதிர்பார்ப்பையும் உங்கள் இதயத்துடிப்பையும் அதிகரிக்கின்ற நெடுந்தொடர்களை உங்களுக்காக வழங்க தயாராக இருக்கிறது. அதன் பிரபல நெடுந்தொடர்களின் மகாசங்கமம் நிகழ்ந்து வரும் தருணத்தில் வரவிருக்கும் வாரத்தில் டிராமா மற்றும் ரொமான்ஸை இன்னும் சேர்த்து மகிழ்ச்சியான பொழுதுபோக்கு அளவை அதிகரிக்க இந்த சேனல் தயார் நிலையில் இருக்கிறது. இயல்புக்கு மாறான, அறிவுக்கு எட்டாத நிகழ்வுகளிலிருந்து உணர்ச்சிகரமான டிராமாக்கள் வரை இதற்கு முன்பு பார்த்திராத சாகசப் பயணத்தை மேற்கொள்ள தயாராகுங்கள். உங்கள் தொலைக்காட்சிப் பெட்டியில் வைத்த கண்களை எடுக்க இயலாதவாறு நிகழ்ச்சிகளோடு ஒன்றவைக்கும் அற்புதமான கதைக்களத்தை கண்டு மகிழ இரவு 7:00 மணியிலிருந்து, திங்கள் முதல் சனிக்கிழமை வரை கலர்ஸ் தமிழை டியூன் செய்ய மறவாதீர்கள்.
அம்மன் & மாங்கல்ய சந்தோஷம் (7:00 PM – 8:30 PM)- இந்த புதிரான, மர்மத்தொடர்களின் மகா சங்கமம் ஒளிபரப்பு இன்னும் அதிக ஆர்வமும், வியப்பும் தருவதாக இருப்பது நிச்சயம். பூஜையின்போது வாசுகியை அடங்கிப்போகுமாறு செய்வதற்கு நம்பூதிரி முயற்சிக்கிறார். மற்றொரு பக்கத்தில் ஈஸ்வரிடமும், லட்சுமியிடமும் சக்தி மன்னிப்பு கேட்கின்றபோது வாழ்க்கையில் ஒரு பிடிப்பை கண்டறியுமாறு சக்திக்கு ஆலோசனை வழங்கும் வாசுகி, பிரச்சனையை சரிசெய்ய ஒரு தீர்வையும் அவளுக்கு வழங்குகிறாள். வாசுகியை கட்டுப்படுத்துவதில் நம்பூதிரி வெற்றி காண்பாரா? சக்திக்கு வாசுகி வழங்கிய பரிந்துரை என்ன? ‘அம்மன்’ மற்றும் ‘மாங்கல்ய சந்தோஷத்தின்’ மகா சங்கமம் நிகழ்வில் அடுத்து என்ன நிகழப்போகிறது என்று அறிய திங்கள் முதல், சனிக்கிழமை வரை இரவு 7:00 முதல் 8:30 மணி வரை கலர்ஸ் தமிழ் அலைவரிசையை டியூன் செய்யுங்கள்.
இதயத்தை திருடாதே & சில்லுனு ஒரு காதல் (8:30 PM–10:30 PM)- ஒரு தீவிரமான வழிபாட்டு செயல்பாட்டிற்குப் பிறகு சிவாவின் உடலிலிருந்து, சூர்யாவின் முன்னோரது ஆவி வெளியேற்றப்படும் நிகழ்வை ‘இதயத்தை திருடாதே’ மற்றும் ‘சில்லுனு ஒரு காதல்’ தொடர்களின் இவ்வார மகா சங்கமம் எபிசோடில் காணலாம். அதைத்தொடர்ந்து அந்த ஆவி, சிவாவின் உடலில் குடி கொண்டதற்கான நோக்கத்தையும், காரணத்தையும் சிவாவும், சகானாவும் கண்டறிகிறார்கள் மற்றும் அதற்கு தீர்வுகாண முயற்சிக்கிறார்கள். ஆவி பிடித்ததற்கான காரணம் என்னவாக இருந்திருக்கும். சிவா மற்றும் சகானாவால் அதற்கு தீர்வுகாண முடிகிறதா? புதிர் நிறைந்த இந்த மர்ம நிகழ்வின் முடிச்சுகள் அவிழ்வதைக் காண இதயத்தை திருடாதே மற்றும் சில்லுனு ஒரு காதல் ஆகிய தொடர்களின் மகா சங்கமம் நிகழ்வை இரவு 8.30 மணியளவில் இந்த வாரம் முழுவதும் கண்டு ரசிக்க கலர்ஸ் தமிழ் அலைவரிசையை மறவாமல் பாருங்கள்.
ஆர்வமூட்டும் இந்த நிகழ்ச்சிகளின் ஒளிபரப்பை கலர்ஸ் தமிழ் அலைவரிசையில் மட்டும் நீங்கள் காணலாம். அதுமட்டுமின்றி, பார்வையாளர்கள் அவர்களது வசதிக்கேற்ப எந்த நேரத்திலும் இந்நிகழ்ச்சியை காண VOOT – ஐ டியூன் செய்யலாம். அனைத்து முன்னணி கேபிள் வலையமைப்புகளிலும் மற்றும் சன் டைரக்ட் (CHN NO 128), டாடா ஸ்கை (CHN NO 1555), ஏர்டெல் (CHN NO 763), டிஷ் டிவி (CHN NO 1808) மற்றும் வீடியோகான் D2H (CHN NO 553) ஆகிய அனைத்து டிடீஹெச் தளங்களிலும் கலர்ஸ் தமிழ் அலைவரிசை நிகழ்ச்சிகளைக் கண்டு ரசிக்கலாம்.