Latest News :

அதிரடி திருப்பங்கள் நிறைந்த கலர்ஸ் தமிழ் நெடுந்தொடர்கள்

0412a687455fb134d11ca5e3ea1c91f1.jpg

தமிழகத்தில் அதிவேகமாக வளர்ந்து வரும் தொலைக்காட்சிகளில் ஒன்றான கலர்ஸ் தமிழ், தமிழக மக்களை கவர்வதற்காக பல்வேறு நெடுந்தொடர்களில் ஒளிபரப்பி வருகிறது. மேலும், தங்களது சீரியல் ரசிகர்களை எந்த நேரத்திலும் இழக்க கூடாது என்பதற்காக ஒவ்வொரு வாரமும் பரபரப்பிற்கு பஞ்சமில்லாத அதிரடி திருப்பங்களும், புதிர்களும் நிறைந்த எப்பிசோட்களை கலர்ஸ் தமிழ் வழங்கி வருகிறது.

 

அந்த வகையில், கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாக இருக்கும் இந்த வார நெடுந்தொடர்களிலும் பல சுவாரஸ்யமான திருப்பங்களும், புதிர்களும் நிறைந்திருக்கின்றன.

 

அவை பற்றி சிறு தொகுப்பு இதோ,

 

Amman 2

 

’அம்மன் 2’ (திங்கள் – சனி, மாலை 6 முதல் 7 மணி வரை)

 

இந்த வார எபிசோடு தொடர்ச்சியான பல அதிரடி திருப்பங்களை கொண்டதாக இருக்கிறது.  ப்ரீத்தி ஸோடியாக் காஸ்மோவை சிறப்பு பார்ட்னராக கொண்டிருக்கும் அம்மன் 2 – ன் புத்தம் புதிய சீசன், இரட்டை கதாபாத்திரங்களில் ஈஸ்வரனை காட்டவிருக்கிறது.  புனிதமான ருத்ரமாலையை கைப்பற்றுவதற்காக ஈஸ்வரனை சக்தி திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று சக்தியின் குடும்பத்தினர் விரும்புகின்றனர்.  எனினும், அவர்களுக்கிடையே ஒரு பிளவை உருவாக்குவதற்கு தீயசக்திகள் கைகோர்க்கின்றன மற்றும் சக்தியையும், ருத்ர மாலையையும் கவர்ந்திழுக்கின்றன. ரசிகர்களை நாற்காலியின் நுணிக்கே அழைத்து வரும் பரபரப்பு மிக்க இந்த தொடர், ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் சனிக்கிழமை வரை ஒளிபரப்பாகிறது.

 

Enga Veettu Meenakshi

 

’எங்க வீட்டு மீனாட்சி’ (திங்கள் – வெள்ளி, இரவு 7 முதல் 8 மணி வரை)

 

மாமா மெய்யப்பனின் குடும்பம் மீனாட்சியின் சொந்த வீட்டிற்கு தங்க வருவதால் வீட்டை விட்டு வெளியர வேண்டிய நிர்பந்தத்தால், சிதம்பரத்தின் வீட்டிற்கு ஒரு வாரம் தங்குவதற்காக மீனாட்சி செல்கிறாள்.  சிதம்பரத்தின் அன்பு வலையில் மீனாட்சி விழுவாளா அல்லது மெய்யப்பனின் குடும்பத்துடனான சம்பந்தத்தில் என்ன நிகழப்போகிறது என்று அறிய திருப்பங்கள் நிறைந்த இத்தொடரைக் காண தவறாதீர்கள்.  தனது மகனுக்கு மீனாட்சியை திருமணம் செய்து வைக்க எந்த அளவிற்கு மெய்யப்பன் செல்கிறார், என்ற விறுவிறுப்பு நிறைந்த இந்த தொடர், திங்கள் முதல் வெள்ளி வரை ஒளிபரப்பாகிறது.

 

Idhayathai Thirudathey

 

’இதயத்தை திருடாதே 2’ (திங்கள் – வெள்ளி, இரவு 8 முதல் 9 மணி வரை)

 

ப்ரீத்தி ஸோடியாக் காஸ்மோவை சிறப்பு பார்ட்னராக கொண்டிருக்கும் இதயத்தை திருடாதே நெடுந்தொடரின் இனிவரவிருக்கும் எபிசோடுகளில் சிவாவின் அடையாளத்தை விசாரித்து கண்டறிய ஆதி திட்டமிடுகிறபோது, சிவாவின் உணர்வுகள் என்னவென்று சஹானா அறிய நேர்கிறது.  சிவாவின் அடையாள மர்மத்தை உடைத்தெறிந்து உண்மையை கண்டறிவதில்  ஆதிக்கு வெற்றி கிடைக்கிறதா, இல்லையா என்பதை தெரிந்துக்கொள்ளும் ஆவலை மக்கள் மனதில் ஏற்படுத்தியிருக்கும் இந்த தொடர், ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை ஒளிபரப்பாகிறது.

 

Abi Trailer

 

’அபி டெய்லர்’ (திங்கள் – சனிக்கிழமை, இரவு 9 மணி முதல் 10 மணி வரை) 

 

அசோக்கின் ஆடையகத்தை மூடுவதற்காக அசோக்கை மைக்கேலும், டோனியும் கடத்தி, அசோக்கின் அம்மா நீலாம்பரியை மிரட்டுகிறார்கள்.  த்ரில்லிங்கான நிகழ்வுகளை அபி டெய்லரில் பார்வையாளர்கள் காணவிருக்கின்றனர்.  தன்னை கடத்தியவர்களிடமிருந்து விடுவித்து, தப்பிக்க அசோக்கால் முடிந்ததா அல்லது அசோக்கை காப்பாற்றி மீட்க அபி வருகிறாளா என்று அறிய மக்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். தொடர்ந்து இந்த தொடர் மீது இருக்கும் ரசிகர்களின் ஆர்வத்தை தக்க வைத்துக்கொண்டு வரும் இந்த தொடர், திங்கள் முதல் சனிக்கிசமை வரை ஒளிபரப்பாகிறது.

 

Sillunu Oru Kadhal

 

’சில்லுனு ஒரு காதல்’ (திங்கள் – சனிக்கிழமை, இரவு 10:00 மணி முதல், 10:30 வரை) 

 

சூர்யாவிற்கும், கயலுக்கும் இடையே உணர்ச்சிகளின் கொந்தளிப்பு  சூறாவளியை காட்டவிருக்கின்றனர்.  காதல் அரும்புகிற போதிலும் கடந்த காலத்தில் இருந்த மோதல் உணர்வு அவர்களுக்கிடையே பிளவை உருவாக்குகிறது.  அதுமட்டுமின்றி, சூர்யாவின் அம்மா அவனுக்கு திருமணம் செய்ய முனைகிறபோது  சூர்யாவும், கயலும் ஒன்று சேர்வார்களா என்று பார்வையாளர்களுக்கு நிச்சயம் ஒரு விருந்தாக அமையும். 

Recent Gallery