Latest News :

குழந்தைகளுடன் பெரியவர்களையும் கவர்ந்த ’வாலு பசங்க’

6d24fa0e000acc0e2f1f5fe24e8532a5.jpg

சுட்டிக்குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களையும் விரும்பி பார்க்க வைக்கும் நிகழ்ச்சியாக ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘வாலு பசங்க’ ஞாயிறுதோறும் மாலை 5:00 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

 

நிக்கி – நீனா தொகுத்து வழங்கும், இந்த நிகழ்ச்சியில் சுட்டிக்குழந்தைகளின் குறும்புத்தனமான மழலை பேச்சும், அவர்களது தனித்திறமைகளும் அனைத்து தரப்பு மக்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது.

 

இந்த நிகழ்ச்சியின் முதல் பகுதியாக சுட்டிக்குழந்தைகள் அவர்களது பெற்றோர்களுடன் அறிமுகமாகி அசத்துக்கிறார்கள். இரண்டாவது பகுதியாக தொகுப்பாளினி நிரஞ்சனாவின் கலகலப்பான கேள்விகளால் சுட்டிக்குழந்தைகளின் மழலை பேச்சில் அவர்களது பெற்றோர்கள் மாட்டிக்கொண்டு முழிப்பது அனைவரையும் சிரிப்பு மழையில் நினைய வைக்கிறது.

 

மூன்றாவது பகுதியாக சுட்டிக்குழந்தைகளுடன் அவர்களது பெற்றோர்களும் கலந்துகொண்டு விளையாடும் கலகலப்பான கேம் ஷோ பகுதியும் இடம்பெற்றிருப்பது சிறப்பு. இறுதி பகுதியாக நிகழ்ச்சியில் பங்குபெற்ற அனைத்து குழந்தைகளுக்கும் பரிசுகள் வழங்கி ஜாலியாக ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமாக நிகழ்ச்சி நிறைவடைகிறது.

 

குறிப்பாக குழந்தைகளிடம் தொகுப்பாளினி  நிரஞ்சனவின் வென்ட்ரிலோக்விசம் பேச்சும், அனைவரையும் ரசிக்க வைக்கும் விதமாக அமைந்துள்ளது.

Recent Gallery