பத்ரி இயக்கத்தில் சுந்தர்.சி, ஜெய் நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த புத்தம் புதிய திரைப்படம் ‘பட்டாம்பூச்சி’ தீப ஒளித்திருநாளை முன்னிட்டு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கிறது.
சுந்தர்.சியிடம் உதவி இயக்குநராக பணியாற்றி, சுந்தர்.சி-ஐ வைத்து ’வீராப்பு’, ’ஐந்தாம்படை’ உள்ளிட்ட படங்களை இயக்கிய பத்ரி இயக்கத்தில், சமீபத்தில் திரைக்கு வந்த திரைப்படம் ’பட்டாம்பூச்சி’.
சுந்தர்.சி நாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் ஜெய் சைக்கோ கொலையாளியாக வித்தியாசமான கதாபாத்திரத்தில் வில்லத்தனத்தில் மிரட்டுகிறார். மேலும், ஹனி ரோஸ், இமான் அண்ணாச்சி, பேபி மானஸ்வி முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்த படம் தீப ஒளித்திருநாளை முன்னிட்டு வருகிற அக்டோபர் 23ஆம் தேதி ஞாயிறு காலை 10:00 மணிக்கு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கிறது.