Latest News :

காதல் மற்றும் நகைச்சுவை பிரியர்களுக்கு ஏற்ற ‘டைம் அவுட்’ தொடர்!

e80c5b96dcdf38f8480773041a14e472.jpg

வயகாம் 18-இன் நிறுவனத்தின் தமிழ் பொழுதுபோக்கு தொலைக்காட்சியான கலர்ஸ் தமிழ், காதலர்கள் வாரத்தை முன்னிட்டு  காதல் கலந்த நகைச்சுவை வெப் சீரிஸான டைம் அவுட் தொடரை தினம்தோறும் இரவு 10 மணிக்கு  ஒளிபரப்பி வருகிறது. காதல் ஜோடிகள் அனைவருக்கும் மகிழ்ச்சியூட்டும் இந்த தொடர்  திருமணத்திற்குப் பிறகு கணவன் மனைவிக்கு இடையே நடக்கும் பல்வேறு சுவாரஸ்யமான தருணங்களை நேர்த்தியாக சித்தரித்துள்ளது. 

 

டைம்அவுட் வெப் சீரிஸ் திருமணத்திற்குப் பிந்தைய வாழ்க்கையின் எதார்த்தத்தை ஏற்றுக்கொள்வதில் அதிர்ச்சிகள் மற்றும் ஆச்சரியங்களுடன் கூடிய எதார்த்தமான தொடராகும். இந்த வெப் சீரிஸில் ராகுல் தனது மனைவி ராதா கர்ப்பமாக இருப்பதை அறிந்ததும் தொடர்ச்சியாக நடைபெறும் சிரிப்பு கலவரங்கள் மூலம்  கடைசியில் இந்த ஜோடி எவ்வாறு வாழ்க்கையை கையாண்டு அதன்  எதார்த்தத்தை கடந்து செல்கிறார்கள்  என்பது பார்வையாளர்களுக்கு மகிழ்ச்சியூட்டுவதாக அமையும்.

 

திருமணம், உறவுகள், மற்றும் ஆண்களை சித்தரிக்கும் விதம் ஆகியவை இடையில்  உள்ள நகைச்சுவை நிறைந்த காட்சிகள் பார்வையாளர்களுக்கு அற்புதமான விருந்தாக அமைந்து, சுவாரஸ்யமான இந்த தொடருக்கு ஈர்க்கக்கூடிய உணர்வை உருவாக்குகிறது.

 

சமகால பொருத்தம் - சிக்கலான பெற்றோர்த்துவம்,  திருமணத்திற்குப் புறம்பான உறவேகள்,  நகர்ப்புற வறுமை மற்றும் வேலை-வாழ்க்கை சமநிலை போன்ற பல நிகழ்வுகளை  ஒவ்வொரு அத்தியாயத்திலும் தற்போதைய காலத்திற்குப் பொருத்தமான சூழ்நிலைக்கு ஏற்றவாறு அமைந்திருக்கும் இந்த வெப் சீரிஸ் பார்வையாளர்களுக்கு மேலும் சுவாரசியமாக்குகிறது. 

 

சிக்கலான விஷயங்களை உள்ளடக்கிய மிக எளிமையான கருத்தை கொண்ட இந்த வெப் சீரிஸ் நகர்ப்புற  பார்வையாளர்களுடன் வலுவான தொடர்பை ஏற்படுத்துகிறது 

 

காதல் மற்றும் நகைச்சுவை பிரியர்களுக்கு  இந்த மகிழ்ச்சிகரமான நகர்ப்புற காதல் நாடகம், அதன் ஈர்க்கக்கூடிய எழுத்து மற்றும் புத்துணர்ச்சியூட்டும் திரைக்கதை  மூலம் இந்த வெப் சீரிஸ் பார்வையாளர்களுக்கு ஒரு ஆழமான பொழுதுபோக்குக்கு அம்சமாக திகழ்கிறது. 

 

 இந்த வெப் சீரிஸில் நடித்திருக்கும் முன்னணி ஜோடிகளின்  உணர்ச்சிகளின்  ஏற்ற இறக்கங்கள் மூலம் இயல்பு வாழ்க்கையில் நிகழும் பல உண்மை நிகழ்வுகளை எதார்த்தமாக சித்தரித்து பார்வையாளர்களை தன்வசப்படுத்துகிறது. 

 

இந்த அழகான ஜோடிகளுக்கு இடையேயான காதல் கலந்த நகைச்சுவை வெப் சீரிஸை  கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் 13 பிப்ரவரி 2023, திங்கட்கிழமை இரவு 8:30 மணி முதல் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள். இந்த டைம் அவுட் வெப் சீரிஸின் காதலை கொண்டாட தினமும்  இரவு 10 மணிக்கு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியை டியூன் செய்ய மறவாதீர்கள்.

Recent Gallery