Latest News :

புதுமை பெண்களை ‘சக்தி விருதுகள்’ மூலம் பெருமைபடுத்திய புதிய தலைமுறை தொலைக்காட்சி

0c0da1008b804377d4a2a908fc2702cc.jpg

பல்வேறு துறைகளில் சாதனை புரிந்துள்ள பெண்களுக்கு புதியதலைமுறையின் ’சக்தி விருதுகள்’ ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன.

 

இன்று சமூகத்தின் முக்கிய அங்கமாக  பெண்கள் விளங்கிவரும் வேளையில் அனைத்து துறைகளிலும் எண்ணற்ற சாதனைகளை புரிந்து வருகின்றனர். பாரதி கண்ட புதுமை பெண்களாக  பலர் இச்சமூகத்திற்கு பெரும் பங்காற்றிவரும் வேளையில் அவர்களை பெருமையாக மட்டுமின்றி கடமையாவும் கருதி தலைமை, புலமை,துணிவு ,கருணை ,திறமை ,சாதனை ஆகிய தலைப்புகளின் கீழ் ’சக்தி  விருதுகள்’ வழங்கப்டுகிறது. 

 

நேச்சுரல்ஸ் இன் இணை நிறுவனர் வீணா  குமரவேல் அவர்களுக்கு தலைமை விருதும், இஸ்ரோவின் ஆராய்ச்சியாளர் கல்பனா அரவிந்த் அவர்களுக்கு புலமை விருதும், கொரோனா பெருந்தொற்றில் மக்களின் உயிரை அசாத்திய திறனால் காப்பாற்றிய சென்னை அரசு பொது மருத்துவமனையின்  முன்னாள் புலத்தலைவர் டாக்டர் ஜெயந்தி அவர்களுக்கு துணிவு விருதும், 31 லட்சம் olive ridley ஆமைகளை பாதுகாத்த  Tree foundationன் நிறுவனர் சுப்ரஜா தாரிணி அவர்களுக்கு கருணை விருதும், மாற்றுத்திறனாளிகளுக்கான வீல் சேர் கூடைப்பந்துவிளையாட்டில் தேசிய அளவில் தேர்வாகி இருக்கும் சுபஜா அவர்களுக்கு திறமை விருதும், எழுத்தாளர் சிவசங்கரி அவர்களுக்கும் வாழ்நாள் சாதனையாளர் விருதும்  வழங்கப்பட்டது . 

 

இந்நிகழ்ச்சி சென்னை வர்த்தக மையம் அரங்கில் மார்ச் 3 ஆம் தேதி மாலை இனிதே நடந்தது. இந்நிகழ்ச்சி புதியதலைமுறை தொலைக்காட்சியில் வரும் ஞாயிற்றுக்கிழமை (12-03-2023) அன்று இரவு 8:00 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

Recent Gallery