தமிழ் பொழுதுபோக்கு சேனலான கலர்ஸ் தமிழ், உங்கள் உலக இசை தின வாரயிறுதியை சிறப்பானதாக மாற்றியமைக்கத் திட்டமிட்டு இருக்கிறது.
கடந்த 2016 ம் ஆண்டு இயக்குநர் பாலா இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘தாரை தப்பட்டை’. இத்திரைப்படத்தில் சசிகுமார் மற்றும் வரலட்சுமி சரத்குமார் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். இளையராஜா இப்படத்திற்கு இசை அமைத்திருந்தார்.
இது இளையராஜாவின் 1000வது படமாக இந்தப்படம் உருவாகி இருந்தது. இளையராஜாவிற்கு இப்படத்தில் இசையமைத்தமைக்காக தேசிய விருது கிடைத்தது. இந்த திரைப்படம் இன்று (ஜூன் 21 ) மதியம் 1:30 மணிக்கு கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிப்பரப்பாக இருக்கிறது.
ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான ராஜீவ் மேனன் இயக்கத்தில் கடந்த 2019 ஆம் தேதியன்று வெளியான திரைப்படம் ‘சர்வம் தாளமயம்’. இப்படத்தில் இசையமைப்பாளரும் நடிகருமான ஜி. வி. பிரகாஷ் குமார் மற்றும் நடிகை அபர்னா பாலமுரளி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
இவர்களுடன் நெடுமுடி வேணு, வினீத், சாந்தா தனஞ்செயன் மற்றும் குமரவேல் ஆகியோர் துணை கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்தப்படத்திற்கு ஏ. ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார். இந்தப்படமானது இன்று பிற்பகல் 4 மணிக்கு ஒளிப்பரப்பாக இருக்கிறது.
‘99 சாங்ஸ்’ 2019 ஆம் ஆண்டு வெளியான இந்திய ஹிந்தி மொழி இசைக் காதல் திரைப்படம். இந்தப்படத்தை விஸ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி இயக்கி இருந்தார். ஏ.ஆர்.ரஹ்மான் முதலில் இந்தியில் (அவரது முதல் தயாரிப்பு பேனரான ஒய்எம் மூவீஸில்) இணைந்து எழுதி தயாரித்திருந்தார்.
ஐடியல் என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரித்து, ஜியோ ஸ்டுடியோஸ் விநியோகித்த இந்தப் படத்தில், அறிமுக நடிகர்களான எஹான் பட் மற்றும் எடில்சி வர்காஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். மேலும் ஆதித்யா சீல் , லிசா ரே மற்றும் மனிஷா கொய்ராலா ஆகியோர் துணைக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்தப்படமானது இன்று இரவு 9:30 மணிக்கு கலர்ஸ் தமிழில் ஒளிப்பரப்பாக இருக்கிறது.