Latest News :

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் அதர்வா வாரம்!

d45a8f7ba034fb42effddc585fcb4b54.jpg

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒவ்வொரு வாரம் ஒரு குறிப்பிட்ட ஜானரை தேர்வு செய்து, அந்த ஜானரில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பு பெற்ற திரைப்படங்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில், இந்த வாரம் நடிகர் அதர்வா வாரமாக அறிவித்துள்ள கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி, அதர்வாவின் 4 திரைப்படங்களை ஒளிபரப்ப உள்ளது.

 

கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில், சந்தோஷ் இயகத்தில், அதர்வா நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான படம் ‘கணிதன்’. பிரபல டிரம்ஸ் கலைஞர் சிவமணி இசையமைத்திருக்கும் இப்படம் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. அதர்வா வாரத்தின் முதல் திரைப்படமாக ‘கணிதன்’ இன்று (ஜூலை 31) இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. 

 

இரண்டாவது திரைப்படமாக, சாம் ஆண்டன் இயக்கத்தில், அதர்வா, ஹன்சிகா, ராதாரவி ஆகியோர் நடிப்பில் வெளியான ‘100’ திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது. அதர்வா போலீஸ் வேடத்தில் நடித்திருக்கும் இப்படம் ஆகஸ்ட் 1 ஆம் தெதி இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகிறடு.

 

‘8 தோட்டாக்கள்’ இயக்குநர் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில், அதர்வா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான திரைப்படம் ‘குறுதி ஆட்டம்’. இதில் பிரியா பவானி சங்கர் நாயகியாக நடிக்க, ராதிகா, ராதாரவி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். பரபரப்பான ஆக்‌ஷன் த்ரில்லர் படமான ‘குருதி ஆட்டம்’ அதர்வா வாரத்தில் ஆகஸ்ட் 2 ஆம் தேதி இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

 

இறுதியாக, அதர்வா போலீஸ் வேடத்தில் நடித்த மற்றொரு படமான ‘ட்ரிகர்’ ஆகஸ்ட் 3 ஆம் தேதி இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. தான்யா ரவிச்சந்திரன் நாயகியாக நடித்திருக்கும் இப்படத்தில் அருண் பாண்டியன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பி.எஸ்.மித்ரன் வசனம் எழுதியிருக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார்.

 

இந்த நான்கு திரைப்படங்கள் அதர்வாவின் திரை பயணத்தில் முக்கியமான படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Gallery