வானவில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும் புத்தம் புதிய நிகழ்ச்சி ’சினி மேக்ஸ்’. இந்நிகழ்ச்சி திங்கள் முதல் ஞாயிறு வரை இரவு 10:00 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
மக்களுக்கு முக்கிய பொழுது போக்காகவும் பணத்தை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் நம் எந்திர வாழ்க்கையில் மன நிம்மதியை தரும் முக்கிய மருந்தாகவும் இருப்பது சினிமா. இப்படி நம் வாழ்வில் முக்கிய பங்காற்றும் இந்த சினிமாவில் நமக்கு பிடித்த நடிகர் நடிகைகளை பற்றி தெரிந்து கொள்வதில் நமக்கு எப்பொழுதும் ஒரு ஆர்வம் இருக்கும். அப்படி தமிழ், தெலுங்கு, ஹிந்தி முதல்; ஹாலிவுட் திரைத்துறை வரை நடக்கும் முக்கியமான சினிமா செய்திகளை உங்களுக்காக சுடச்சுட ஒளிபரப்பும் முற்றிலும் மாறுபட்ட ஒரு நிகழ்ச்சி, ’சினி மேக்ஸ்’ திங்கள் முதல் ஞாயிறு வரை இரவு 10:00 மணிக்கு .வானவில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது .இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் ஜீவிதா.