Latest News :

விஜய் டிவி-ன் புதிய நிகழ்ச்சி ‘மிஸ்சர்ஸ் சின்னத்திரை’

38cc547845dde4689ca14a7c2054caa8.jpg

விஜய் தொலைக்காட்சியில் முற்றிலும் புதிய ஒரு நிகழ்ச்சி தொடங்கவுள்ளது. இதுவரையில் நமது சின்னத்திரை நடிகைகள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களை மிக அழகாக செய்திருப்பதை கண்டிருக்கிறோம். ஆனால் திரைக்கு பின்னால் அவர்கள் எவ்வளவு திறமைசாலிகள் என்பதை இந்த புது நிகழ்ச்சி நம் மக்களுக்கு காட்டவிருக்கிறது. இந்த நிகழ்ச்சி வரும் செப்டம்பர் 24, முதல், ஞாயிற்றுக்கிழமை, இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது. திரையில் கிராமத்து பெண்ணாய் வரும் சில கதாநாயகிகள் நிஜ வாழ்க்கையில் அல்ட்ரா மாடர்ன் பெண்ணாக இருப்பார். 

 

இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 9 சுற்றுகள் உள்ளன. ஒவ்வொரு சுற்றும் வெவ்வேறுமாதிரி இருக்கும். இவை அனைத்தும் நம் கதாநாயகிகளின் திறமையையும் மன உறுதியையும் வெளிப்படுத்தும் சுற்றுகளாக அமையும். 

 

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கபோகும் தொலைக்காட்சி நடிகைகள்- நடிகை நிஷா கணேஷ், கல்யாணம் முதல் காதல் வரை புகழ் நடிகை வனிதா ஹரிஹரன் மற்றும் நடிகை வந்தனா, நடிகை ஸ்ரீ வித்யா, நடிகை ஸ்ரீ துர்கா, பகல் நிலவு புகழ் நடிகை சிந்து ஷியாம், கிங்ஸ் ஆப் காமெடி ஜூனியர்ஸ் புகழ் RJ சிந்து, நடிகை சுஜிதா, தெய்வம் தந்த வீடு புகழ் நடிகை மோனிகா மற்றும் நடிகை அணு விக்னேஷ் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்கள். மேலும் பல ஆச்சரியமூட்டும் விஷயங்கள் நேயர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. 

 

இந்த நிகழ்ச்சியில் வெற்றிபெற்று யார் அந்த டைட்டிலை தக்கவைத்துக்கொள்கிறார் என்பதை தெரிந்துகொள்ள நிகழ்ச்சியை வாரந்தோறும் தவறாமல் காணுங்கள்.  

Recent Gallery