விஜய் தொலைக்காட்சியில் முற்றிலும் புதியதாக தொடங்கப்பட உள்ள நிகழ்ச்சி ’எஸ் ஆர் நோ’ (Yes or No) பிரம்மாண்ட கேஷ் ஷோவான இந்த நிகழ்ச்சி வரும் செப்டம்பர் 23 ஆம் தேதி, சனிக்கிழமை தோறும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.
இந்தநிகழ்ச்சியில் பங்கேற்கபோவது, நம்மில் ஒரு நேயரே, ஒவ்வொரு வாரமும் இந்தநிகழ்ச்சியில் 128 பங்கேற்பாளர்கள் கலந்துகொள்வார்கள். அவர்கள் சொல்லும் எஸ் ஆர் நோ என்ற பதில் பரிசுகளை அள்ளித்தரும்.
ஒரு புது விதமான மற்றும் ஆச்சரியமூட்டும் திறமையை கொண்ட திறமைசாலிகள் அந்த மேடையில் அரங்கேற்றுவார்கள். அந்த செயலை அவர்கள் செய்து முடிப்பார்களா? என்பதை போட்டியாளர்கள் கணித்து எஸ் ஓர்நோ என்று சொல்ல வேண்டும். அப்படி ஒவ்வொரு சுற்றின் முடிவிலும் போட்டியாளர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வரும். போட்டியின் இறுதியில் இருக்கும் அந்த ஒரு நபருக்கு பெரிய பரிசு காத்திருக்கிறது.
இந்த நிகழ்ச்சிக்கு மேலும் உற்சாகமூட்ட ஒவ்வொரு வாரமும், நான்கு நட்சத்திர போட்டியாளர்கள் கலந்துகொண்டு, போட்டியாளர்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள்.
இப்படி விறுவிறுப்பாக செல்லப்போகும் இந்த நிகழ்ச்சியை ஜெகன் தொகுத்து வழங்குகிறார். கனெக்ஸன்ஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இந்த நிகழ்ச்சியை அவர் தொகுத்து வழங்குகிறார். இந்த நிகழ்ச்சி முற்றிலும் ஆச்சரியமும் மகிழ்ச்சியும் கலந்த ஒரு எக்சைட்டிங் கேம் ஷோ நிகழ்ச்சியாக அமையும்.