Latest News :

நியூஸ் 7 டிவி-ன் ’சூப்பர் ஹவுஸ்ஃபுல்’

8e6f09692a84b4106f89ed716307ee56.jpg

சினிமா தான் என் மூச்சு...என்று சொல்லும் நண்பர்களுக்கு ஒரு நல்ல செய்தி. உங்களுக்காக பிரத்யேகமாக நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் நாள் தோறும் மாலை 5.30மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி தான் ’சூப்பர் ஹவுஸ்ஃபுல்’.

 

சினிமா உலகில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளின் அணிவகுப்பு, உங்கள் அபிமான நட்சத்திரங்களின் சிறப்பு பேட்டிகள், கோலிவுட் தொடங்கி ஹாலிவுட் வரை அரங்கேறிய முக்கிய நிகழ்வுகள் அனைத்தின் சங்கமம் ‘சூப்பர் ஹவுஸ்ஃபுல்’.சினிமாவை ரசிக்கும் ரசிகர்களுக்காகவே நாள் தோறும் பல சுவாரஸ்யமான சினிமா செய்திகளை விரைவு செய்திகளாக உடனுக்குடன் கொண்டு வந்து இல்லத்தின் வரவேற்பறையை நிறைக்கும் ஹவுஸ்ஃபுல் எக்ஸ்பிரஸ். 

 

சென்னையில் நடைபெறும் அனைத்து முக்கிய சினிமா நிகழ்வுகளையும் உங்கள் பார்வைக்கு கொண்டு வருகிறது. ஞாயிறுகிழமையை இனிதாக்க ஹீரோ ஹீரோயின்களின் புது புது பேட்டிகள் புதுப்பொலிவுடன் ஹவுஸ் ஃபுல் எக்ஸ்பிரஸ் நாள் தோறும் நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில்  மாலை 5.30மணிக்கு ஒளிபரப்பாகிறது.   

 

தினம் தினம் பல தரப்பட்ட மொழி சினிமா, பல பல நுனுக்கமான அப்டேட்ஸ். அதிகமான சினிமா செய்திகளை பாப்கார்ன் போல் கொடுக்கும் இந்நிகழ்ச்சியை  தயாரிப்பாளர்கள் வினோதினி, கமல் கரண், உத்ரா ஆகியோர் நெறிப்படுத்துகின்றனர்.

Recent Gallery