Latest News :

வேந்தரின் ‘இது எங்க ஏரியா’

2e95f4d90aab6724978a69049798e9df.jpg

வேந்தர் தொலைக்காட்சியில் ஞாயிறு தோறும் பிற்பகல் 2.00 மணிக்கு ஒளிபரப்பப்படும் புத்தம் புதிய நிகழ்ச்சி ’இது எங்க ஏரியா’.

 

இந்த நிகழ்ச்சியில் அடுக்கு மாடி குடியிருப்புகளில் வசிக்கும் பெண்கள் 2 அணிகளாக பிரிக்கப்பட்டு கலாட்டா  விருந்து படைக்கிறார்கள். ஒவ்வொருவருடைய தனித்திறமைகளும் வெளிப்படும் வண்ணம் ஆடல், பாடல் மற்றும் அறிவுத்திறனுக்கான போட்டிகள் வைக்கப்பட்டு இறுதியில் பரிசுகள் வழங்கப்படுகிறது .

 

வீட்டிற்குள்ளேயே அடைபட்டிருக்கும் இல்லத்தரிசிகளின் திறமையை வெளிப்படுத்தும் இந்த ’இது எங்க ஏரியா’ நிகழ்ச்சி நேயர்களிடையே குறிப்பாக பெண்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. ஞாயிறு தோறும் பிற்பகல் 2.00 மணிக்கு வேந்தர் டிவியில் ஒளிபரப்பப்படும் இந்நிகழ்ச்சியை விக்ரம் உருவாக்க, செபாஸ்டியன் தொகுத்து வழங்குகிறார்.

Recent Gallery