பாகுபலியும் அதன் இரண்டாம் பாகமான பாகுபலி-2 படமும் உலக சினிமாவின் கவனத்தையே தென்னிந்திய திரையுலகின்மீது கவனம் செலுத்த வைத்தன. இந்நிலையில் பாகுபலி-3 பாகம் எடுக்கப்படுமா? என்கிற கேள்வி தற்போது வரை தொடர்ந்து வருகிறது. இதுவரை வெளிப்படையாக ராஜமௌலியும், பிரபாஸும் தெரிவிக்கவில்லை, இதுகுறித்து தற்போது மவுனம் களைந்துள்ளார் பிரபாஸ். பாகுபலி ஒருபாகத்தில் நடிக்க 4 ஆண்டுகாலம் ஆனது. இரண்டு பாகங்களுக்கும் சேர்த்து 8 ஆண்டுகளாகி விட்டது. ஒரு நடிகனுக்கு இது மிகப்பெரிய ரிஸ்க். ஸ்கிரிப்ட் அமைந்து மறுபடியும் பாகுபலிக்கு தயாரானாலும் சில விதிமுறைகளை ஏற்றுக்கொண்டால் மீண்டும் நடிக்கலாம். 4 ஆண்டுகள் என்பதை இரண்டே ஆண்டுகளில் படத்தை முடித்தால் மீண்டும் நடிக்கலாம்’ என்கிறார் பிரபாஸ். பாகுபலி அடுத்த பாகத்திற்கு பிரபாஸ் தயாராக வேண்டுமானால் பல ஆண்டுகள் முடியை வளர்க்க வேண்டிய கட்டாயமும் இருக்கிறது. தற்போது அவர் சாஹோ படத்திற்காக துபாய், அபுதாபி, மும்பையில் நடைபெற்று வரும் ஷூட்டிங்கில் பங்கேற்று வருகிறார்.