Latest News :

வால்தனம் செய்தால் பரிசு கொடுக்கும் வேந்தர் டிவி!

62b1876a929d39e612db2d65187e0b5b.jpg

வேந்தர் டிவியில் ஒவ்வொரு ஞாயிறு கிழமை மாலை 5.00 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி ’வாலு பசங்க’.

 

இந்த நிகழ்ச்சியில் 11 வயது வரையிலான சிறுவர் சிறுமியர்களை  தாங்கள் படிக்கும் பள்ளியில் சந்தித்து  அவர்களது  வால்தனமான நிகழ்சிகளை நேயர்களோடு பகிர்ந்து கொள்கிறார்கள். அதோடு பாட்டு பாடுவது,  ரைம்ஸ் சொல்வது, கதை சொல்வது என சுவாரஸ்யமான விஷயங்களையும் பகிர்ந்து கொள்கிறார்கள். 

சிறுவர்களிடம் கலகலப்பாக பேசி அவர்களுக்கான விளையாட்டுகளை புகுத்தி அதில் வெற்றி பெறும் சிறுவர்களுக்கு பரிசும் அளிக்கப்படுகிறது. இந்த ’வாலு பசங்க’ நிகழ்ச்சி தொடர்ச்சியாக ஒளிபரப்பாகி நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.

 

வேந்தர் டிவியில் ஞாயிறுகிழமை மாலை 5.00 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த ‘வாலு பசங்க’ நேயர்களிடையே குறிப்பாக சிறுவர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. பிரபலமான இந்த நிகழ்ச்சியை ப்ரீத்தி  தொகுத்து வழங்குகிறார்.

Recent Gallery