பெப்பர்ஸ் தொலைக்காட்சி நேயர்களுக்கென பல்வேறு பிரிவுகளில் சுவையான காலை நிகழ்ச்சிகளை அளிக்கிறது "பெப்பர்ஸ் மார்னிங் ". இந்நிகழ்ச்சி திங்கள் முதல் வெள்ளி வரை காலை 7:30 மணிக்கு ஒளிபரப்பாகும்.
இந்த காலை நிகழ்ச்சியில் சிறிய மாற்றம் பெரிய வெற்றி, நேரம் நல்ல நேரம், யோகம் தரும் யோகா, சிறகடிக்கும் மனசு, இன்று ஒரு கதை போன்ற நிகழ்ச்சிகள் அடங்கும்.
சிறிய மாற்றம் பெரிய வெற்றி பல சாதனையாளர்களின் வாழ்க்கையில் நடந்த சின்ன சின்ன சம்பவங்கள் பெரிய வெற்றிகளுக்கு உறுதுணையாக இருந்ததை விளக்கும் நிகழ்ச்சி இடம் பெறுகிறது. தினமும் ஜோதிடம் கணிப்புகளும், ராசி பலன் நிகழ்ச்சிகளும் நேரம் நல்ல நேரம் நிகழ்ச்சியிலும், ஒவ்வொரு மனிதனின் அன்றாட வாழ்க்கையில் யோகா பயிற்சியும், ஆயுர்வேத மருத்துவமும் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை பற்றிய விழிப்புணர்வை வழங்கும் யோகம் தரும் யோகா மற்றும் இன்று ஒரு கதை போன்ற நிகழ்ச்சிகள் உள்ளடக்கப்பட்டுள்ளது.
இது தவிர சிறகடிக்கும் மனசு நிகழ்ச்சி, காதல் பிரச்சனை, கணவன், மனைவி இடையே பிரிவுகள் குடும்ப உறவுகளில் சிக்கல், மாணவர்களின் கல்வி பற்றிய அச்சம் மற்றும் பாதுகாப்பு குறிப்புகள் சொல்லும் நிகழ்ச்சியாக இருக்கும் ‘பெப்பர்ஸ் மார்னிங்’ திங்கள் முதல் வெள்ளி வரை காலை 7:30மணிக்கு ஒளிபரப்பாகிறது . இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவர் ஸ்ரீ தேவி.