Latest News :

’முகமூடி’ தோல்விக்கு யார் காரணம்? - ரகசியத்தை சொல்லும் மிஷ்கின்!

da0dd7fec390141e94ad31ef8a60eed3.jpg

பிரபலங்களின் மனதில் புதையுண்டிருக்கும் நினைவுகள், அவர்களது சுயசரிதைகளில் வெளிப்படக்கூடும். அது ஒரு வாய்ப்பு மட்டுமே. பல நேரங்களில் அந்த அனுபவங்களும் கனவுகளும் எவரிடமும் பகிர்ந்துகொள்ளப்படாமல், சம்பந்தப்பட்டவர்களின் மனவானில் மட்டுமே தனித்து திரிவது வழக்கம். இதனை பல நேரங்களில் பிரேக் செய்திருக்கிறது புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நட்சத்திர ஜன்னல் நிகழ்ச்சி. நடிகை சங்கீதாவின் இயல்பான பேச்சும் நட்புடன் பழகும் பாங்கும் இதற்கு உறுதுணையாக இருக்கிறது.

 

வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் நட்சத்திர ஜன்னல் சீசன் 2-வில் நடிகர் ஜீவா, அக்‌ஷரா ஹாசன், ஐஸ்வர்யா ராஜேஷ், கவுதம் கார்த்திக் உட்பட பலர் பங்கேற்றிருக்கின்றனர். தங்களது மனம் திறந்து, பல நினைவுகளை வெளிப்படையாகப் பேசியிருக்கின்றனர். இதற்கு ஒரு சோறு பதமாக இருக்கப் போகிறது, வரும் ஞாயிறு இரவு 7.00 மணிக்கு ஒளிபரப்பாகும் இயக்குனர் மிஷ்கின் பங்கேற்கும் நட்சத்திர ஜன்னல்.

 

இந்நிகழ்வில் துப்பறிவாளனுக்கு முன் விஷாலுடன் தனக்கிருந்த நட்பையும், துப்பறிவாளனுக்கு அது சகோதர உறவாக மாறியதையும் சொல்கிறார். கமல் பற்றிய தன் கருத்தை ஆழமாகவும் இளையராஜாவுக்கும் தனக்குமான நெருக்கத்தையும் பதிவு செய்கிறார், தனது சினிமாக்கள் மட்டுமன்றி, சினிமா உலகில் நிகழும் பல விஷயங்களைப் பகிர்கிறார். தான் சந்தித்த அவமானங்களை, வலிகளை, அதனுள் தனது இயல்பில் ஏற்பட்ட மாற்றங்கள் பற்றிப் பேசுகிறார். ஜீவா நடித்த முகமூடியின் தோல்விக்கு யார் காரணம் என்று சொல்கிறார். தனது மனைவி, மகள், அவர்களுடனான வாழ்க்கை பற்றிய நினைவுகளைப் பகிர்கிறார். தனது குடும்பம் பற்றி, அவர் எங்கும் இதுவரை பகிர்ந்ததில்லை என்பது மிகவும் முக்கியமானது.

 

நிறைய பிரத்தியேக தகவல்களைக் கொண்ட இந்த நட்சத்திர ஜன்னல், மிஷ்கின் ரசிகர்களுக்கு மட்டுமல்ல, சினிமாவை நேசிக்கும் எவருக்கும் ஒரு நல்ல காட்சியனுபவத்தை தரும் என்பது உறுதி.

Recent Gallery