ஸ்ரீ சங்கரா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் புதிய நிகழ்ச்சி ஆதித்ய ஹ்ருதயம். தினமும் காலை 6:30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
வாழ்க்கை பாதை மென்மையான பூக்கள் மற்றும் முட்களும் நிறைந்த பாதையாகும். சவால்கள் நிறைந்ததாகும். நாம் இந்த சவால்கள் அனைத்தையும் சமாளித்து வெற்றி இலக்கை அடைய வேண்டும். நமது சனாதன தர்மம் நாம் பிரச்சனைகளில் இருந்து வெளிவர தேவையான அனைத்தையும் நமக்கு அளிக்கின்றது.
தொன்று தொட்டே ஸ்லோகங்கள் நமது பிரச்சனைகளுக்கு தீர்வு காண பெரிதும் உதவி புரிகிறது. இப்படிபட்ட முக்கியமான ஸ்லோகங்களில் ஒன்றே ஆதித்ய ஹ்ருதயம். ( ஆதித்யா = சூர்ய பகவான், ஹ்ருதயம் = இதயத்தினை குனபடுத்த கூடிய ஊட்டம் அளிக்க கூடியது என்று பொருள்) அகத்திய மாமுனிகள் ஸ்ரீ ராமனுக்கு இந்த மந்திரத்தினை உபதேசித்தார்.
ஸ்ரீ ராமர், ராவணனுடன் யுத்தம் செய்வதற்கு முன் இந்த மந்திரத்தினை மூன்று முறை கூறிய பின் யுத்தம் செய்து இராவணனை போரில் வென்றார்.
நேயர்கள் இதனை தினமும் பாராயணம் செய்வதினால் பல பயன்களை பெறலாம் தினமும் காலை 6:30 மணிக்கு ஸ்ரீ சங்கரா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.