பல்வேறு திசைகளில் பரவிக்கிடக்கும் செய்திகளை, பல்வேறு கோணங்களில் அணுகுவதுதான் ’விட்டதும் தொட்டதும்’ நிகழ்ச்சி.
ஒவ்வொரு வாரமும் இந்நிகழ்ச்சி சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.
ஆர்வத்துடன் புதியதைத் தேடி, தேடியதை ஆராய்ந்து அணுகி, அணுகிய உடனே மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளத் துடிப்போருக்காகவே இந்த நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாரமும் நம் கண்களுக்குப் புலப்படும் உள்ளுர் / வெளியூர் அரசியல், அறிவியல், விளையாட்டு உள்ளிட்ட செய்திகளை தேர்ந்தெடுத்து, அவற்றின் புலப்படாத பக்கங்களை மக்களின் பார்வைக்கு கொண்டு வருகிறது இந்நிகழ்ச்சி.
தேர்ந்த ஆய்வாளர்கள் வழங்கும் செய்திகளை, மூன்று முதல் ஆறு தொகுப்பாளர்கள் தொகுத்து வழங்குகிறார்கள். ஒவ்வொரு வாரமும் இந்நிகழ்ச்சி சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.