நம் பாரத கலாச்சாரத்தின் அடையாளம் நாமசங்கீர்தனம். ஒவ்வொரு மனிதனின் அந்தரங்கத்தையும் சுத்தீகரித்து, இவ்வையத்தையே நேசிக்க வைத்து, அன்நேசத்தின் மூலம் உலகையே வெல்லக்கூடிய மனநிலையை கொடுக்கும் சக்தி பஜனைக்கு உண்டு. பஜனையின் மூலம் நாம் இறைவனை உணரலாம். நம்முடைய தீய எண்ணங்கள் அழிந்து, அபார ஞானம், ஆன்மீக அறிவு, தூய சிந்தனை வளரும். பக்தர்களை இறைவனது இருப்பிடத்திற்கும், இறைவனை பக்தர்களின் இருப்பிடத்திற்கும் கொண்டு சேர்க்கும் ஆற்றல் பஜனைக்கு உண்டு.
பஜனை மண்டலி மற்றும் அனைத்து இசைப்பள்ளிகளுக்கும் ஸ்ரீ சங்கரா டிவியின் பஜன் சாம்ராட் சீசன் - 5 எனும் பிரம்மாண்ட மேடை மாபெரும் வாய்ப்பினை கொடுக்கவுள்ளது. தற்பொழுது பக்த கோடியின் விருப்பத்திற்கும் பேராதரவிற்கும் இணங்க பஜன் சாம்ராட் சீஸன் - 5 யின் வெற்றிப்பயணம் ஆரம்பமாகவுள்ளது.
பஜன் சாம்ராட் சீஸன் - 5ல் பங்கேற்க நீங்கள் 55 வயதிற்குட்பட்டவராக இருக்க வேண்டும்.
ஸ்ரீ சங்கரா தொலைக்காட்சி தங்கள் அனைவரையும் பஜன் சாம்ராட் சீஸன் - 5 நிகழ்ச்சிக்கு அன்புடன் வரவேற்கிறது. அனைவரும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று, நம் பாரத பண்பாடு கலாச்சாரத்தின் அடையாள சின்னமாக திகழும் பஜனையின் பெருமை, நம் வருங்கால தலைமுறையினருக்கும் கூட இது ஒரு தீபச்சுடராய் பிரகாசமாளிக்க வேண்டும் என்பது எங்களின் அளவற்ற ஆசை. ஸ்ரீ சங்கரா தொலைக்காட்சி தன் நாடு பெற்ற பண்பாடு கலாச்சாரத்தை உலகிற்கு உணர்த்தி, ஆத்ம சுத்திக்கு வழி வகுத்து, எல்லோரிடமும் சிநேக பாவத்தை உண்டாக்கும் முயற்சியை அயராது செய்து வருகிறது. அது போன்ற தொடர் முயற்சிகளில் பஜன் சாம்ராட் சீஸன் - 5 பிரத்யேகமான ஒன்று.
உங்கள் திறமையையும், கலையாற்றலையும், இசைஞானத்தையும் உலகிற்கு அறிமுகப்படுத்திட இது ஒரு அறிய வாய்ப்பு. அதிருஷ்டமெனும் சாவி இல்லாமலேயே "பஜனை சாம்ராட் சீஸன் - 5 எனும் அவகாச நுழைவாயில் திறந்து விட்டது. இனி வெற்றி உங்களுடையதாகட்டும்.
குறிப்பு: ஒரு குழுவில் வாத்திய கோஷ்டி கலைஞர்களோடு சேர்ந்து குறைந்ததும் 7 முதல் 9 நபர்கள் பங்கேற்கலாம்.
மேலும் விபரங்களுக்கு log on செய்யவும்: www.srisankaratv.net
எங்கள் whats app எண்: 9663300841 / 9176686518
email: bhajansamraat@srisankaratv.net