Latest News :

விஜய் டிவி-ன் பிர்ம்மாண்ட கேம் ஷோ ‘ எஸ் ஆர் நோ’

5400debebe02d50b1f7c194550b92a81.jpg

விஜய் தொலைக்காட்சியில் முற்றிலும் புதிய நிகழ்ச்சி ஒன்று தொடங்கியுள்ளது. ‘எஸ் ஆர் நோ’ என்ற இந்த நிகழ்ச்சி ஒரு பிரமாண்டமான கேம் ஷோவாக அமைந்தது, சனிக்கிழமை தோறும், இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இந்த எஸ் ஓர் நோ நிகழ்ச்சி எந்தமாதிரியான ஒரு கேம் ஷோ என்ற கேள்வி அனைவர் மனதிலும் இருந்தது.

 

இந்தநிகழ்ச்சியில் பங்கேற்பது, நம்மில் ஒரு நேயரே, ஒவ்வொரு வாரமும் இந்தநிகழ்ச்சியில் 128 பங்கேற்பாளர்கள் கலந்து கொள்வார்கள். இது இந்த நிகழ்ச்சியின் சிறப்பும் கூட. அவர்கள் சொல்லும் எஸ் ஆர் நோ என்ற பதில் பரிசுகளை அள்ளித்தரும். 

 

ஒரு புதுவிதமான மற்றும் ஆச்சரிய மூட்டும் திறமையை கொண்ட திறமைசாலிகள் அந்தமேடையில் தங்கள் திறமையை அரங்கேற்றுவார்கள். அந்த செயலை அவர்கள் செய்து முடிப்பார்களா என்பதை போட்டியாளர்கள் கணித்து எஸ் ஆர் நோ என்று சொல்ல வேண்டும். 

 

அப்படி ஒவ்வொரு சுற்றின் முடிவிலும் போட்டியாளர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வரும். போட்டியின் இறுதியில் இருக்கும் அந்த ஒரு நபருக்கு பெரிய பரிசுகாத்திருக்கிறது. இந்தநிகழ்ச்சிக்கு மேலும் உற்சாக மூட்ட ஒவ்வொரு வாரமும்,

 

நான்கு நட்சத்திர போட்டியாளர்கள் கலந்துகொண்டு, போட்டியாளர்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். இப்படி விறு விறுப்பாக செல்லப்போகும் இந்தநிகழ்ச்சிக்கு தொகுப்பாளர் ஜெகன்ள். கனெக்ஸன்ஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இந்தநிகழ்ச்சியை தொகுத்துவழங்குவார். இந்தநிகழ்ச்சி முற்றிலும் ஆச்சரியமும் மகிழ்ச்சியும் கலந்த ஒரு எக்சைட்டிங் கேம் ஷோ நிகழ்ச்சியாக அமையும். 

Recent Gallery