Latest News :

சேனல்களுக்குள் நடக்கும் போட்டி ஆரோக்கியமானதா? ஆபத்தானதா?

af672c335dcd87d1a049f5a0cf48a064.jpg

வரும் புத்தாண்டை முன்னிட்டு நியூஸ்7 தொலைக்காட்சியில் சிறப்பு நிகழ்ச்சியாக சேனல்களுக்குள் நடக்கும் போட்டி ஆரோக்கியமானதா..? ஆபத்தானதா என்கிற பட்டிமன்றம் ஒளிபரப்பாகிறது. டிச-31 காலை 11.00 மணிக்கும் இரவு 1௦.௦௦ மணிக்கும், அதேபோல புத்தாண்டு தினத்தில்  காலை 10.௦௦ மணிக்கும் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.  

 

இதன் நடுவராக பேராசிரியர் ராமச்சந்திரன் தலைமை வகிக்கிறார். ஆபத்தானது என்கிற தலைப்பில் முதல் நபராக சொல்வதெல்லாம் உண்மை புகழ் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன், அவரை தொடர்ந்து மிர்ச்சி விஜய் விஜய் டிவி நகைச்சுவை பேச்சாளர் மோகனசுந்தரம் ஆகியோர் தங்கள் வாதங்களை முன் வைக்கின்றனர். ஆரோக்கியமானது  என்கிற தலைப்பில் சியாமளா, விஜய் டிவி பேச்சாளர் மணிகண்டன் மற்றும் ஸ்மைல் சேட்டை விக்னேஷ் ஆகியோர் பேசுகிறார்கள். 

 

1993க்குப்பின் தான் சாட்டிலைட் சேனல்கள் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை கொடுத்து வருகின்றன. அவற்றில் இருந்து தற்போதுவரை அந்த நிகழ்ச்சிகள் எப்படி மாற்றம் அடைந்துள்ளன என பொழுதுபோக்கு சேனல்களையும் செய்தி சேனல்களையும் பல்வேறு விதமான கோணங்களில் இந்த பட்டிமன்றம் அணுகியிருக்கிறது.  

 

இன்று பொழுதுபோக்கு சேனல்களும், செய்தி சேனல்களும் ஒருவருக்கொருவர் போட்டி போடுகிறார்களே இது மக்களுக்கு லாபகரமானதாக இருக்கிறதா..? இல்லை சேனல்களுக்கு லாபமாக இருக்கிறதா என்பதையும் இந்த பட்டிமன்றம் அலசுகிறது.

Recent Gallery