சத்தியம் தொலைக்காட்சியில் சத்தியம் எக்ஸ்பிரஸ் நிகழ்ச்சியில் உலகச் செய்திகள் மட்டுமின்றி தேசிய, மாநில, மாவட்ட, விளையாட்டு செய்திகளும் இடம் பெறுகின்றன.
இந்நிகழ்ச்சியின் மூலம் நாடு முழுவதும் நடைபெறும் அரசியல் மற்றும் பொதுவான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம். இந்த செய்தி தொகுப்பு எக்ஸ்பிரஸ் வேகத்தில் செய்தி தொகுப்பாளர்களால் வாசிக்கப்படுவதால் அவசர உலகத்தில் அனைவராலும் விரும்பி பார்க்கப்படும் நிகழ்ச்சியாக அமைந்துள்ளது. அரைமணி நேரத்தில் அறுபது முதல் எழுபது செய்திகள் உரிய படக்காட்சிகளுடன், சுவாரசியமான சினிமா செய்திகளையும்,அரை மணி நேரத்திலேயே தெரிந்து கொள்ளலாம்.
’சத்தியம் எக்ஸ்பிரஸ்’ விரைவு செய்திகள் திங்கள் முதல்சனிக்கிழமை வரை பிற்பகல் 1 மணிக்கு ஒளிபரப்பாகும் இதனை ஸ்ரீ ராம் தொகுத்து வழங்குகிறார்.