புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி. ஷண்முகம் ரஜினிகாந்தை வைத்து எம் ஜி ஆர் சிலையை திறந்து தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.
அதே மேடையில் எம் ஜி ஆரின் ஆட்சியை தன்னால் தர முடியுமென்று, முதல்வராக வர விரும்பும் தன்னுடைய ஆசையையும் வெளிப்படுத்தி இருக்கிறார்.
பிஜேபி ஸ்லீப்பர் செல்லாக ரஜினியை தூக்கிப் பிடிக்கிறாரா ஏ.சி. ஷண்முகம் என்ற சந்தேகத்தை முன்வைத்து அவரிடம் நடத்தப்பட்ட ’கேள்விக்கணைகள்’ நேர்க்காணல் நிகழ்ச்சி இன்று மாலை 7:00 மணிக்கு சத்தியம் டிவி-இல் ஒளிபரப்பாகிறது.
ரஜினி தொடர்பான பல சுவாரஸ்ய விஷயங்களை கொண்ட இந்த அரசியல் நேர்க்காணலின் மறு ஒளிபரப்பு ஞாயிறு மாலை 4.30 மணிக்கு ஒளிபரப்பாகும்.