புதிய தலைமுறையில் சனிக்கிழமை தோறும் மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி ’விட்டதும் தொட்டதும்’.
அந்தந்த வாரம் நிகழும் முக்கியமான நிகழ்வுகளை தொகுப்புகளாக சுவாரஸ்யமாக வழங்கும் நிகழ்ச்சி. அதிலும் குறிப்பாக செய்திகளில் அதிகம் பேசப்படாத, தவறவிட்ட முக்கிய செய்திகளை அலசி ஆராய்ந்து சிறு சிறு தொகுப்புகளாக அளிக்கப்படுகிறது. ஊதிப் பெரிதாக்கப்படும் வெற்று பரபரப்புகளால் உணர்வுப்பூர்வமாகவும், ஆழமாகவும் விவாதிக்கப்பட வேண்டிய பல செய்திகள் மக்களின் கவனத்தில் இடம் பெறாமலேயே போய்விடுகின்றன.
கவனம் பெறத் தவறிய முக்கியச் செய்திகளை மக்கள் பார்வைக்கு கொண்டு வருவதே ’விட்டதும் தொட்டதும்’. இந்நிகழ்ச்சியை தொகுப்பாளர் சோனியா தொகுத்து வழங்க, இதனை புதியதலைமுறை சார்பில் உருவாக்குகிறார் மடோனா ஜனனி.
இந்த நிகழ்ச்சியின் கூடுதல் சிறப்பம்சம் தயாரிப்பு ஆங்கர், செக்மெண்ட் ஆங்கர் என அத்தனையும் பெண்களால் வழங்கப்படும் நிகழ்ச்சியாகும்.