பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்ட நம் குறுகிய கால வாழ்க்கை நிச்சயமாகவே சுவாரசியம் நிறைந்தது தான். ஆனால் அவசர உலகில் எதையும் நின்று நிதானித்து ரசிக்கவும் அனுபவிக்கவும் நமக்கு நேரம் இல்லை. இல்லாததிற்காக ஏங்கி, இருப்பதையும் இழந்து விட்டு, பரபரப்பாக ஏதோ ஒரு தேடலில் ஓடி கொண்டிருக்கும் நம்மை சிந்திக்க தூண்டும் ஒரு நிகழ்ச்சி தான் சத்தியம் தொலைக்காட்சியின் வர்ணஜாலம்.
வாழ்க்கையின் வெவ்வேறு கோணங்களையும், பல நீதி கருத்துக்களையும் அற்புதமான குறும்படங்கள் மூலம் விவரிக்கும் இந்த நிகழ்ச்சியை ஞாயிறு தோறும் காலை 9:30 மணிக்கும் அதன் மறு ஒளிபரப்பையும் செவ்வாய் தோறும் மாலை 3:30 மணிக்கும் சத்தியம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும். இதனை பிரவீன் தொகுத்து வழங்குகிறார்.