புதுயுகம் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10:00 மணிக்கு "பர்ஸ்ட் பிரேம்" என்னும் புதிய நிகழ்ச்சி ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.
தமிழ்த் திரையுலகச் செய்திகளை சூடாகவும் சுவையாகவும் பரிமாறும் நிகழ்ச்சி ‘பர்ஸ்ட் பிரேம்’ திரையுலக நட்சத்திரங்களின் பரபர பேட்டி, இசை வெளியீட்டு நிகழ்ச்சி, ஷூட்டிங் ஸ்பாட் அனுபவங்கள், என தமிழ் சினிமா பற்றிய சுவாரசிய தகவல்களை உங்கள் கண்களுக்கு விருந்தாக்கும் விதமாக ஒளிபரப்பாகிறது. மேலும் ஹாலிவுட் திரைப்படங்களின் சுவாரஸ்யமான காட்சிகளும் ஒளிபரப்புகிறது புதுயுகம் தொலைக்காட்சி. இந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குபவர் கண்மணி.