விஜய் தொலைக்காட்சியில் சமீபத்தில் வெளியான புதிய தொடர் அவளும் நானும், இந்த தொடர் நிலா மற்றும் தியா என்னும் இரட்டை சகோதரிகளை பற்றியது.
இந்த தொடரில் நிலாவின் திருமணம் பணக்கார வீட்டை சேர்ந்த பையன் ப்ரவீனுடன் நிச்சயிக்கப்படுகிறது. வேறொருவரை விரும்பும் நிலா, தன் பெற்றோரை சம்மதிக்க வைக்க முடியாமல் போகிய நிலையில் திருமணத்தின் போது ஒரு கடிதம் எழுதி வைத்துவிட்டு செல்கிறார். குடும்பப் பெயரை காப்பாற்ற தியாவை நிலாவாக நிறுத்தி திருமணம் செய்து வைக்கிறார் தந்தை.
தற்பொழுது நிலவாக பிரவீனை திருமணம் செய்திருக்கும் தியாவிற்கு தனது காதலன் அரவிந்தை ஏமாற்றிவிட்டதாக ஒருபுறம் தோன்றுகிறது, மற்றொரு புறம் நிலவாக தன்னை நினைத்து தன் காதல் முழுவதையும் பொழியும் பிரவீனிடம் தான் யார் என்பதை சொல்ல முடியாமல் போகும் குற்றவுணர்ச்சி. இதற்கிடையில் சிக்கி தவிக்கும் தியா.
இதனை அடுத்து அரவிந்த் தியாவை பிரவீனிடம் இருந்து விலகிவருமாறு சமாதானம் செய்ய முயற்சிக்கிறான். தியா என்ன கூறப்போகிறார்? மற்றொரு பக்கம், நிலாவின் காதலன் விஜய் வீட்டில் அவருக்கு பெரிய வரவேற்பு இல்லை, விஜய்யின் பாட்டி அவளை கடுமையாக எச்சரிக்கிறார், நிலா அடுத்து என்ன செய்ய போகிறார்?
உருவங்கள் இடம்மாறின வாழ்கை தடம் மாறுகிறது.இதுவே இந்தகதையின் முக்கிய கரு. இந்த தொடரின் இயக்குனர் ராஜதனுஷ். மேலும், நடிகை மௌனிகா இந்த தொடரின் இரட்டை சகோதரி நிலா மற்றும் தியாவாக நடிக்கிறார். மௌனிகா இந்த தொடரின் மூலம் தொலைக்காட்சிக்கு அடியெடுத்து வைக்கிறார். இந்த தொடரின் ஹீரோ ப்ரவீனாக நடிகர் அம்ருத் நடிக்கிறார்.
இனி திங்கள் மற்றும் வெள்ளி வரை மதியம் 1.30 மணிக்கு இந்த தொடரை கண்டு மகிழுங்கள்.