பெப்பர்ஸ் டிவியில் ’பில்டிங் ஸ்ட்ராங் பேஸ்மெண்ட் வீக்’ எனும் நகைச்சுவை நிகழ்ச்சி நேயர்களின் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மக்கள் கூடும் இடங்களில் இந்நிகழ்ச்சி குழுவினர் அவர்களை நேரடியாக சந்திப்பது மட்டுமின்றி நாம் அவர்களிடம் ஒரு நிமிடம் தமிழில் பேசணும். நாம் கேட்கும் கேள்விக்கு இதற்கு மக்கள் தமிழில் பதில்கள் சொல்லும், ஆனால் அவர்கள் சொல்லும் பதில்கள் நகைச்சுவையாக இருப்பதோடில்லாமல், நமது சிந்தனையை தூண்டும் வகையிலும் அமைந்துள்ளது.
இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் மட்டுமின்றி தொலைக்காட்சி தொகுப்பாளர்களும் பங்குபெறும் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் நகைசுவை நடிகர் முல்லை தனசேகரன். இந்நிகழ்ச்சி வாரந்தோறும் ஒவ்வொரு வாரம் புதன் கிழமை காலை 8:30 மணிக்கு பெப்பர்ஸ் டிவியில் ஒளிபரப்பாகிறது.