மனிதனுக்கு உணவு முக்கியம். ஒவ்வொரு கலாச்சாரத்திக்கும் தனித்துவமான உணவு தத்துவம் உள்ளது அதை பல்வேறு வகையில் உருவாக்கலாம். அந்த வகையில் பெப்பெர்ஸ் தொலைக்காட்சியில் ஞாயிறுதோறும் காலை 8:00 மணிக்கு ஒளிபரப்பாகும் "நம்ம வீட்டு செஃப்" நிகழ்ச்சி இல்லத்தரசிகள் அனைவருமே நல்ல செஃப்தான் என்பதை ஊருக்கு உரக்கச்சொல்லியும், ஊக்குவித்தும் வருகிறது.
இந் நிகழ்ச்சி அவர்கள் இல்லத்துக்கே சென்று அவர்கள் குடும்பத்தினரோடு கலந்துரையாடி படப்பிடிப்பு செய்வது அனைவராலும் பாராட்டை பெற்றுவருகிறது. இந்த வாரம் ரோட்டரி கிளப் ஆஃப் மெட்ராஸ் ஈஸ்ட் உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்கிறார்கள். இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் சாண்டனா.