எதையுமே கொஞ்சம் நகைச்சுவை கலந்து சொன்னால் சுலபமாக கருத்துக்கள் மக்களை சென்று அடையும் என்பது பொதுவான கருத்து. நாட்டின் முக்கிய பிரச்சனைகளை நகைச்சுவை கலந்து கொடுக்க வருகிறது #டேக்.
இந்த நிகழ்ச்சியில் ஒரு சமூக பிரச்னையை நையாண்டி தனமாக சித்தரித்து அதில் அடங்கி இருக்கும் பிரச்சனையை நகைச்சுவையாக மக்களுக்கு சொல்கிறார்கள். உதாரணமாக காவிரி பிரச்சனை, அரசியல் நிகழ்வுகள், சமூகத்தில் நடக்கும் முக்கிய பிரச்சனைகள் என்று அனைத்தையும் கதாபாத்திரங்களோடு உருவாக்கி நமக்கு வழங்குகிறார்கள்.
மேலும் களத்தில் இருந்தும் சமூகம் சார்ந்த பிரச்சனைகளை அலசுகிறார்கள். பல பகுதிகள் அடங்கிய இந்த நிகழ்சியை சாதிக் தொகுத்து வழங்குகிறார். சனிக்கிழமை இரவு 9.30 மணிக்கு மற்றும் ஞாயிறு காலை 8.30 மணிக்கும் சத்தியம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.