Latest News :

வேந்தர் தொலைக்காட்சியின் மே தின சிறப்பு நிகழ்ச்சிகள்

3d06dca9629387aa5406fc93588a7810.jpg

பூந்தோட்டமா? போராட்டமா ? பட்டிமன்றம்:

 

வேந்தர் தொலைக்காட்சியில் மே தினசிறப்பு நிகழ்ச்சியாக திரைப்பட நடிகர் ஒய் .ஜி .மகேந்திரா தலைமையில் நடைபெறும் பட்டிமன்றம் இன்றைய சூழ்நிலையில்   தொழிலாளர்களின் வாழ்க்கை நிலை பூந்தோட்டமா ?போராட்டமா ?என்ற தலைப்பில் ,மே தினத்தன்று காலை 9:00மணிக்கு ஒளிபரப்பாகிறது. 

 

வியர்வை துளிகள்:

 

உழைப்பவர் தினத்தில் உழைப்பாளர்களை சந்தித்து அவர்களை மகிழ்விக்கும் வகையில் சிறுசிறு விளையாட்டு போட்டிகள் வைத்து அவர்களை மகிழ்விக்கும் கலகலப்பான  வியர்வை துளிகள்   நிகழ்ச்சி காலை 10:00மணிக்கு ஒளிபரப்பாகிறது.

 

தல தல தான்:

 

மே  தினத்தில்  பிறந்த நாள் கொண்டாடும் தல அஜித் ரசிகர்கள் பங்கு பெரும் குதூகலமான நிகழ்ச்சி தல தல தான் .இதில் அஜித் ரசிகர்கள் பங்குபெற்று அஜித் அவர்களின் சுவாரஸ்யமான விஷயங்களையும், பாடல், நடனம், வசனம் என ரசிகர்கள் அசத்தும் சிறப்பு நிகழ்ச்சி மே தினத்தன்று பகல் 12:30 மணிக்கு வேந்தர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.

Recent Gallery