ஸ்ரீ பாரதி அஸோசியேட் தயாரிப்பில் ‘கண்ணம்மா’ எனும் மெகா தொடர் திங்கள் முதல் வியாழன் வரை இரவு 8:00 மணிக்கு ராஜ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.
கண்ணம்மா அழகி.... கடின உழைப்பாளி... அறிவாளி.. .தன் குடும்ப சூழல் மற்றும் தன் அப்பாவின் கோபம் இரண்டின் காரணமாகவும் பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திக்கொண்டு ஒரு டெய்லராக தன் அப்பாவின் கடையில் வேலை செய்கிறாள். எப்போதும் வசை சொற்களையும், அவமானத்தையும் மட்டுமே தன் அப்பாவின் மூலமாக சந்தித்து வந்தவளுக்கு அவர் மூலமாகவே ஒரு விடுதலையும் கிடைக்கிறது. எப்படியாவது கண்ணம்மா தன்னை விட்டும், தன் குடும்பத்தை விட்டும் ஒழிந்தால் போதும் அவள் ராசியில்லாதவள் அவளால் தான் குடும்பமே நலிந்து போனது என்று சொல்லும் அவளது அப்பா ஒரு ஃபேஷன் கார்மென்ட்ஸிற்கு அவளை டெய்லராக வேலை செய்ய அனுப்புகிறார்.
அங்கு முதன்முறையாக பாராட்டுகளையும், அன்பான வார்த்தைகளையும் கேட்கிறாள். அதுவும் அவளது முதலாளி மூலமாகவே என்பதில் அவளுக்கு பேரானந்தம்... அவளது சுறுசுறுப்பும் கடின உழைப்பும் முதலாளி கார்த்திக்குக்கு மிகவும் பிடித்துபோக அவள் நிறுவனத்தின் தவிர்க்க முடியாத பெண்ணாக மாறுகிறாள்.
இந்நிலையில் கண்ணம்மாவே எதிர்பார்க்காத ஒரு தருணத்தில் அவளது முதலாளியின் மானத்தை காப்பாற்ற வேண்டி அவரையே திருமணம் செய்ய வேண்டியதாகிறது. ஆனால் திருமணத்தின் மூலம் தனது மானத்தையும், இமேஜையும் காப்பற்றிக்கொண்ட அவளது முதலாளி, இது மற்றவர் பார்வைக்காக நடந்த திருமணம் மட்டுமே.. இதை மறந்துவிடு என்று கூறி அவள் குடும்பத்திற்கு பெரும் பணத்தை தருவதாக கூறுகிறான்.
கண்ணம்மா அவளது கணவனின் மனதையும் தனக்கு எதிர்பாராமல் அமைந்த இந்த வாழ்வையும் காப்பாற்றிக்கொள்ள போராடுவதே கதை.. இத்தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் கே.எல்.அர்ச்சனா நடிக்க, க்ளைடன் சின்னப்பா இயக்குகிறார்.