பெப்பர்ஸ் தொலைக்காட்சியில் வாரந்தோறும் வெள்ளி இரவு 9.00 மணிக்கு ஒளிபரப்பாகும் ‘சாட் வித் ரம்யா’ 200 எபிசோட்களை தாண்டி, நேயர்களின் ஏகோபித்த ஆதரவுடன் வெற்றி நடைப்போடுக் கொண்டிருக்கிறது.
நடிகை ரம்யா தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியில் நேயர்கள் தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு தங்களது நெருங்கிய உறவுகளில் ஏற்படும் பிரச்சனைகள், நட்பில் ஏற்படும் விரிசல்கள், காதலில் ஏற்படும் பிரச்சனைகள், போன்ற விஷயங்களை ரம்யாவிடம் விவாதிப்பதோடு அவரது ஆலேசனைகளையும் பெற்று மன ஆறுதல் அடைக்கின்றனர். இந்நிகழ்ச்சியில் பெரும்பாலும் காதலர்களிடையே ஏற்படும் பிரச்சினைகளையும் கணவன் மனைவியரியடையே ஏற்படும் பிரச்சினைகளுடன் அதிக நேயர்கள் தொலைபேசி வாயிலாக ரம்யாவுடன் பேசி மன ஆறுதல் பெறுகின்றனர்.
இந்நிகழ்ச்சி வெற்றியடைந்தற்கான குறியீடு என்னவெனில் தொலைபேசி வாயிலாக பிரச்சினையை கூறியவர்கள் பின்னர் சிலகாலம் கழித்து ரம்யாவின் ஆலோசனைப்படி தங்களது பிரச்சினையானது தீர்க்கப்பட்டு விட்டதாகவும், நெகிழ்ச்சியுடனும் நன்றியுடனும் தெரிவிக்கின்றனர். நாளுக்கு நாள் நேயர்களின் எண்ணிக்கை பெருகிக்கொண்டிருக்கும் இந்நிகழ்ச்சியானது நேயர்களின் மனச்சுமையை குறைக்கும் ஒரு வடிகாலாக அமைந்துள்ளது.