நம் கண்ணுக்கு முன்னால் நடக்கும் அநீதிகளை பார்த்துக்கொண்டு மெளனத்திருப்பதைவிட மேலான தவறு எதுவும் இருக்கமுடியாது. மக்களுக்கு எதிரான அநீதிகளை போக்குவதற்கு குறைந்த பட்சம் கோபம் கொள்ள வேண்டுமென்பதே ’ரெளத்ரம் பழகு’ நிகழ்ச்சியின் மையப்பொருளாகும்.
சமூக, பொருளாதார, சுற்றுச்சூழல், மற்றும் பண்பாட்டு ரீதியாக பிரச்சினைகளை மையப்படுத்தி அதனைப் போக்குவதற்கு குரல்கொடுக்கிறது இந்த நிகழ்ச்சி. பிரச்சினைகளின் நன்மை தீமைகளை ஆய்ந்து மக்களை பாதிக்காதவண்ணம் தீர்வு காண அறிவுறுத்தும் இந்த நிகழ்ச்சி சனிக்கிழமை தோறும் இரவு 8:00 மணிக்கும் அதன் மறுஒளிபரப்பு ஞாயிறு மதியம் 12:30 மணிக்கும் நமது புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. இந்நிகழ்ச்சியை கார்மல் தொகுத்து வழங்குகிறார்.