புதுயுகம் தொலைக்காட்சியில் ஒவ்வொரு ஞாயிற்று கிழமையும் இசையமைப்பாளர்கள் பங்குபெறும் பிரத்தியேகமான நிகழ்ச்சி ‘மியூசிக் மாஸ்டர்ஸ்’. இந்நிகழ்ச்சியில் இந்த வாரம் பல வெற்றி படங்களை கொடுத்த பிரபல இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் அவர்களின் சிறப்பு நேர்காணல் ஒளிபரப்பாக உள்ளது.
இசையமைப்பாளர் அவர்களின் இசைக்கு அதிக ரசிகர்கள் இருப்பார்கள் ஆனால் தேவி ஸ்ரீ பிரசாத்துக்கு மட்டும் அவர் இசையினை தாண்டி அவருக்கான தனிப்பட்ட ரசிகர்களை அதிகம் கொண்டவர். இவரின் இசைப்பயணம் மற்றும் ‘சாமி 2’ படத்தின் சிறப்பு தகவல்கலுடன், இந்நிகழ்ச்சி வரும் ஞாயிறு இரவு 7:00 மணிக்கு புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது.