Latest News :

சத்தியம் டிவி-யின் ‘20-20 செய்திகள்’

aa3136e42e05bb582c26e5255be3d575.jpg

செய்திகள் பல விதமான கோணங்களில் சேகரிக்கப்படுகின்றன. அவைகள் ஒவ்வொன்றிற்கும் பின்பாக காரண காரியங்கள் ஒளிந்திருக்கும். அவற்றை அலசி ஆராய்ந்து, நேர்மையாக உண்மையோடு மக்களுக்கு வித்தியாசமான முறையில் வழங்குவது தான்  20-20 செய்திகள்.

 

ஒவ்வொரு நாளும் பல்வேறு செய்திகளை பல்வேறு கோணங்களில் வழங்கும் சத்தியம் தொலைக்காட்சியின் மற்றுமொரு சிறப்பு செய்தியின் தொகுப்பு தான் 20-20. இதில் ஒரு நாளில் நடந்த முக்கிய செய்திகளை அதன் உண்மை தன்மை மாறாமல் முழு பின்னணியுடன் உங்களுக்கு தொகுத்து வழங்க வருகிறது. 

 

தமிழகம், இந்தியா, உலகம், அரசியல், விளையாட்டு, வானிலை என பல துறை செய்திகளோடு உங்கள் வரவேற்பறைக்கே வருகிறது. 20-20 என மொத்தம் நாற்பது செய்திகளோடு வரும் இந்த நிகழ்ச்சி திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 8 மணிமுதல் 8.30 வரை உங்கள் சத்தியம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. இந்த நிகழ்சியை ஸ்ரீராம் தொகுத்து வழங்குகிறார். 

Recent Gallery