நமது பாரம்பரியத்தின் சிறப்பு உறவுமுறைகளை கொண்டாடுவது தான், இதில் அதிகம் கொண்டாடப்பட வேண்டிய உறவு முறையென்றால் அது குழந்தைக்கும் அப்பாக்களுக்குமானது தான் காரணம் இவ்வுலகை நமக்கு அதிகம் அறிமுகப்படுத்துவது தந்தை தான். அதற்க்காக பல நேரங்களில் அவர் குழந்தையாக மாறும் தருனத்தை நம்மால் உணர முடியும் அப்படிப்பட்ட அப்பாகளும் குழந்தைகளும் மகிழ்ந்து விளையாடும் புத்தம் புதிய கேம் ஷோ ’டாடி நம்பர் 1’ இந்நிகழ்ச்சியினை பிரபல தொகுப்பாளார் சுட்டி அரவிந்த் தொகுத்து வழங்கயிருக்கிறார்.
இவர் சுமார் பத்து வருடங்களுக்கு மேலாக சின்னத் திரையில் பல விதமான நிகழ்சிகளை தொகுத்தும், பங்கேற்றும் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் சமூக வளைத்தளத்திலும் இவருக்கு தனி ரசிகர் பட்டாலம் உண்டு. இவரது சுட்டித் தனமும் நகைசுவை உணர்வும் குழந்தைகளோடு சேர்ந்து இவர் அடிக்கும் லூட்டியும் இந்நிகழ்ச்சியின் சிறப்பு.
ஓய்வின்றி ஓடிகோண்டேயிருக்கும் இன்றைய வாழ்வியல் சூழலில் ஒவ்வொரு தந்தையும் தங்கள் குழந்தைகளுடன் செலவிடும் நேரத்தின் பயன்பாட்டை உணர்த்தும் இந்நிகழ்ச்சி ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை மாலை 7 மணிக்கு புதுயுகத்தில் ஒளிபரப்பாகவுள்ளது.