Latest News :

ராஜ் டிவியில் ஒளிபரப்பாகும் புதிய சீரியல் ‘நலம்...நலமறிய ஆவல்’

25dd1a42b781f6e6891aa1f3287f7b29.jpg

ஸ்ரீ பாரதி அஸோசியேட் தயாரிப்பில் ‘நலம்...நலமாறிய ஆவல்’ எனும் மெகா தொடர் ராஜ் டிவி-யில் திங்கள் முதல் வியாழன் வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

 

இந்த தொடரின் கதைப்படி, பாரியும் சந்தியாவும் பாலிய சிநேகிதிகள். யாருக்காகவும் எதற்காகவும் ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுக்காத நட்பு, இவர்களுடைய நட்பு. இவர்களுடைய நட்புக்கு இடையூறு செய்யாமல், இல்லறம் நடத்தும் அனுசரணையான கணவன்மார்கள் சந்தியாவும், பிரசன்னாவும். பாரிக்கு ஒன்றென்றால் சந்தியா மட்டுமில்லாமல் பிரசன்னாவில் குடும்பமே துடிக்கும். அதே போல் சந்தியாவுக்கு ஒன்றென்றால் பாரி மட்டுமில்லாமல் சந்தியாவின் குடும்பமே துடிக்கும்.

 

ஒரு சந்தர்ப்பத்தில் தோழி சந்தியாவை காண வந்த பாரி வழியில் ரவுடிகள் சிலர் முன்னாள் அமைச்சர் ஒருவரை கொலை செய்வதை வீடியோ எடுக்கிறாள். பாரியின் செயலை கண்டு பாரியின் வீட்டார் அச்சம் கொள்ள பாரியின் கணவர் (சத்யாவின் அண்ணன்) பாலு அவளை பாராட்டி கமிஷ்னரிடம் அழைத்து செல்கிறார். கமிஷ்னர் பாராட்ட, விஷயம் அறிந்த சந்தியாவும், பிரசன்னாவும் பாரியின் செயலைக் கண்டு பூரிப்படைகிறார்கள்.

 

கொளையாளிகளுக்கு விவரம் தெரிய வர பாரியை வலை வீசி தேடுகிறார்கள். அவர்கள் வலையில் சந்தியா சிக்குகிறாள். சித்ரவதைப்படுத்தப்படுகிறாள். கொலையாளி பாரியை பற்றி கேட்க, ஆபத்தை உணர்ந்த சந்தியா வாயை திறக்காமல் இருக்கிறாள். விபரம் அறியாத பாரியும், பிரசன்னாவும் குடும்பத்தாரும் சந்தியாவை தேடி அலைகிறார்கள்.

 

கொலையாளிகளிடம் சிக்கிய சந்தியாவை பாரி மீட்டெடுத்தாளா? சந்தியாவை பகடை காய் ஆக்கி கொலையாளிகள் பாரியை சிறை பிடித்தார்களா? காவல்துறை என்ன செய்து கொண்டிருக்கிறது? என்பது தற்போது இந்த சீரியலை பரபரப்பாக நகர்த்திக் கொண்டிருக்கிறது.

 

இந்த தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் திலக், ஷாஜி ஜெகநாதன், ஷெரீன், சாம்பவி ஆகியோர் நடிக்க கோபி.ஆர் இயக்குகிறார்.

Recent Gallery