Latest News :

மூலிகை மருத்துவத்தைப் பற்றி தெளிவாக சொல்லும் ‘மூலிகை மருத்துவம்’

a2de56b231112a66fc939a11cc8a1ed6.jpg

எந்த நோய்க்கு என்ன மருந்து?  அஞ்சிநடுங்கும் அளவிற்கு இன்றைய நவீன விஞ்ஞான உலகமே புதுப்புது நோய் பெருக்கத்தைக் கண்டு மலைக்கிறது. ஆனால், ஆன்மீகத்தின் மூலம் அறிவியலை போதித்த 18 சித்தர்கள் உள்ளிட்ட எண்ணற்ற சித்தர்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கும் முன்னரே மனிதர்களின் நோய் வகைகளைக் கண்டறிந்தனர்.

 

இத்தகைய சித்தர்கள் நமக்கு அறிமுகப்படுத்திய 'மூலிகை' வைத்திய முறையில் நமது உடலைப் பேணிக் காக்க வழிவகை சொல்வதுடன், மூலிகைகளைக் கொண்டு பல்வேறு மருந்துகளின் செய்முறை, அவற்றை கையாளும் முறை, உட்கொள்ளும் முறை என மூலிகை மருத்துவத்தைப் பற்றி துல்லியமாக தெள்ளத் தெளிவாக நேயர்களுக்கு சொல்வதே புதுயுகம் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் ‘மூலிகை மகத்துவம்’.

 

பெருவாரியான மக்களின் விருப்ப நிகழ்ச்சியான இதில் சித்த  மருத்துவர் ராஜசேகர் அவர்களின்  எளிய தமிழ் நடையில், மூலிகைகளைப் பற்றி மருந்து செய்முறைகளுடன் விளக்கமளிக்கிறார். கனிமொழி தொகுத்து வழங்கும் இத்தொடரானது  திங்கள் முதல் வெள்ளிவரை காலை 8.45 மணிக்கு புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.

Recent Gallery