நமது புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் “யாவரும் கேளிர்” நிகழ்ச்சி பல மாவட்டங்களில் சிறந்த பேச்சாளர்களை கொண்டு முனைவர் கு.ஞானசம்பந்தன் அவர்களின் தலைமையில் வெற்றிகரமாக நடந்து வருகிறது , அடுத்தகட்டமாக கடல் கடந்து அதிக தமிழ் மக்கள் வாழும் சிங்கப்பூர் மாநகரில் சிறந்த பேச்சாளர்களை கொண்டு சிறப்பு நிகழ்ச்சியாக நடைபெற்றது..
இந்நிகழ்ச்சியில் சிங்கப்பூர் வாழ் தமிழர்கள் அதிக ஆர்வமுடன் கலந்து கொண்டு நிகழ்ச்சியினை சிறப்பித்தனர்..எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்பதை உணர்வுப்பூர்வமாக இந்நிகழ்ச்சியின் மூலம் பதிவிட்டிருக்கிறார்கள் , இனி வரும் வாரங்களில் சிங்கப்பூர் சிறப்பு யாவரும் கேளிர் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும்
ஒவ்வொரு ஞாயிறு காலை 10.00 மணிக்கு யாவரும் கேளிர் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிவருகிறது.