சிவகார்த்திகேயன் - இயக்குநர் பொன்ராம் கூட்டணியின் 3 வது படமான ‘சீமராஜா’ மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சமந்தா ஹீரோயினாக நடித்திருக்கும் இப்படத்தில் சிம்ரன் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.
வரும் செப்டம்பர் மாதம் 13 ஆம் தேதி வெளியாக இருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, மாபெரும் திருவிழா போல கடந்த 3 ஆம் தேதி மதுரையில் நடைபெற்றது.
இந்த நிலையில், மதுரையில் நடைபெற்ற ‘சீமராஜா’ இசை திருவிழா சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சியாக வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி சன் டிவியில் மதியம் 1.30 மணி முதல் 3.30 மணி வரை ஒளிபரப்பாக உள்ளது.