Latest News :

‘பஜன் சாம்ராட் சீசன் 5’ - ஆகஸ்ட் 19 ஆம் தேதி இறுதிப் போட்டி

e8b15735ba5708ace87057248eb91192.jpg

‘பஜன் சாம்ரான்’ நிகழ்ச்சியின் 5 வது சீசனின் இறுதிப் போட்டி வரும் ஆகஸ்ட் 19 ஆம் தேதி சென்னையில் நடைபெறுகிறது.

 

இந்தியாவின் உயர்ந்த கலாச்சாரத்தையும்  நமது தொன்மையான சம்பிரதாயங்களையும் என்றென்றும் உயர்த்திப்பிடிப்பதோடு மட்டுமல்லாமல் உலகெங்கும் பரப்பிடவும், பறைசாற்றவும் நமது ப்ராச்சீனா ஸம்ப்ரதாயத்தையும் பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் கடந்த ஒன்பது ஆண்டுகளாக உயிர்ப்புடன் வைத்திருக்கிறோம்.

 

அதில் ஒரு முயற்சி தான் இந்த கலியுகத்தில் நம் பரம்பொருளின் அருளை எளிமையாக நாமஸங்கீர்த்தனத்தின் மூலம்  பெற வேண்டும் என்ற எண்ணமே ’பஜன் சாம்ராட்’ நிகழ்ச்சிக்கான விதை. பல பாகவதர்கள் தங்களது வாழ்நாள் முழுவதும் நாமஸகீர்த்தனங்களைப்  பாடுவதற்கே அர்ப்பணித்துள்ளனர்  அவர்களது அர்ப்பணிப்பே புதுமையான தனித்துவமான உலகில் முதன்மையான ’பஜன் சாம்ராட்’ நிகழ்ச்சியை நடத்தத் தூண்டியது.

 

Bhajan Samarat

 

’பஜன் சாம்ராட்’ முதல் சீசனே உலகெங்கும் உள்ள மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. வரும் ஆகஸ்ட் 19 ஆம் தேதி ‘பஜன் ஸாம்ராட்’ ஐந்தாவது சீசன் நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி இந்தியா முழுதும் பல்வேறு இடங்களில் தேர்வு செய்து  தேர்ந்தெடுக்கப்பட்ட  ஐந்து குழுக்கள் இதில் கலந்து கொள்கின்றனர். 

இந்நிகழ்ச்சி சென்னை தி.நகரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா கானா சபாவில் நடைபெற இருக்கிறது. பல்வேறு நட்சத்திரங்கள் பங்கு பெறுகிறார்கள். ஆன்மிகப் பற்றுடையோர் தவறாமல் கலந்துக் கொண்டு   நாமஸங்கீர்த்தனங்களின் பயன் அடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Recent Gallery