திரைப்பட நடிகை சோனியா அகர்வால் நடிப்பில் புதுயுகம் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகும் ‘மல்லி’ தொடர் மக்களிடம் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.
காதலுக்காக குடும்பத்தினரை எதிர்த்துத் திருமணம் செய்தவர்கள் பிரசாத் – வினோதினி தம்பதி. இருவரும் ஆளுக்கொரு துறையில் கொடிகட்டிப் பறக்கிறார்கள். இவர்களுடைய ஒரே குழந்தையான ஷிவானியை நகரிலேயே பெரிய பள்ளியில் படிக்க வைத்து, வேண்டியதை எல்லாம் வாங்கித் தருகிறார்கள். ஆசைப்பட்டது எல்லாம் வாங்கி கொடுத்து நாங்கள் சம்பாதிப்பது எல்லாமே ஷிவானிக்காகத் தான் என்று சொல்லும் பெற்றோர், செய்ய இருக்கும் தவறு என்ன? ஷிவானிக்கு ஏற்பட இருக்கும் பிரச்சினை என்ன? என்பது ரசிகர்களிடம் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், இன்றைய சூழ்நிலைக்கு மிகபொருத்தும் வகையில் குழந்தைகளின் வளர்ப்பில் பெற்றோர் செலுத்த தவறும் செயல்களையும், அதனால் அந்த குழந்தைக்கு ஏற்படும் பாதிப்புகளையும் மிக நேர்த்தியாக படம் பிடித்து காட்டுகிறது ’மல்லி’ தொடர்.
இந்தத் தொடரில் வினோதினியாக சோனியா அகர்வால் நடிக்கிறார். அவருடன் சேது டார்வின், தேனி முருகன், முரளி, சுசித்ரா ஆனந்தன், கிருஷ்ணகுமாரி, பேபிஹரிணி, மாஸ்டர் ஜாக் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.