ஐந்து மொழிகளில் உருவாகும் ‘ஃபீல் மை லவ்’!

தமிழ்ப் படங்களை தெலுங்கு மற்றும் கனண்ட மொழிகளில் விநியோகம் செய்பவரும், பல பான் இந்தியா திரைப்படங்களை வெளியிட்டவருமான ஏ.என்.பாலாஜி முதல் மூறையாக நேரடியாக தமிழில் தயாரிக்கும் திரைப்படம் ‘ஃபீல் மை லவ்’.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என பான் இந்தியா திரைப்படமாக உருவாகி வரும் இந்த படத்தில் எம்.எஸ்பாஸ்கர், ஆதித்யா பாஸ்கர், ஐரா, அம்மு அபிராமி, ராஜய்யப்பா, நோபிள் ஜேம்ஸ் மற்றும் பிரியங்கா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் மதுசூதனன் ராவ் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.

ஹரி பிர்காஷ்.எம் எழுதி இயக்கும் இப்படத்திற்கு ’ஹவுஸ் மேட்ஸ்’ (House Mates) படத்தின் மூலம் பார்வையாளர்களைக் கவர்ந்த எம்.எஸ். சதீஷ் ஒளிபப்திவு செய்கிறார். ராஜரவிவர்மா.எஸ் மற்றும் பாலசுப்ரமணியன்.ஜி ஆகியோர் இப்படத்திற்கு இசையமைக்கின்றனர். ’லவ்’ (LOVE), ‘கொலை சேவல்’ (Kolai Seval) போன்ற படங்கள் மற்றும் பல குறிப்பிடத்தக்க விளம்பரப் படங்களில் பணியாற்றிய அஜய் மனோஜ் இப்படத்தின் படத்தொகுப்பை மேற்கொள்கிறார்.

“வாழ்க்கையின் எந்தக் கட்டத்திலும் ஒரு அதிசயம் நிகழலாம்” என்ற மனதிற்கு இதமான கருப்பொருளை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இப்படம், சுவாரஸ்யமான தருணங்கள், இயல்பான உறவுகள், ஆழமான உணர்ச்சிகள் மற்றும் எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த ஒரு தனித்துவமான காதல்-நகைச்சுவைத் திரைப்படமாக இருக்கும் என்கிறார் இயக்குநர்.

இப்படத்தின் இதமான கதைக்களம் மற்றும் விறுவிறுப்பான திரைக்கதை, இளைஞர்கள் மற்றும் குடும்பப் பார்வையாளர்கள் என இரு தரப்பினரையும் சமமாக ஈர்க்கும் என்று படக்குழுவினர் உறுதியாக நம்புகின்றனர்.

சென்னை மற்றும் புதுச்சேரியில் படப்பிடிப்பு நடைபெற்றது. இறுதிக்கட்டப் படப்பிடிப்பு மூனார் மலைப்பிரதேசத்தில் விருவிருப்பாக நடைபெற்று வருகிறது.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியிடப்படவுள்ள இப்படம், இந்தியா முழுவதும் உள்ள பார்வையாளர்களைச் சென்றடையும் வகையில் தயாராகி வருகிறது.

adithya baskarfee my loveirams baskartamil movie feel my loveஃபீல் மை லவ்ஆதித்யா பாஸ்கர்எம்.எஸ்.பாஸ்கர்தமிழ்ப் படம் பீல் மை லவ்
Comments (0)
Add Comment