‘விஸ்வாசம்’ படத்தின் மூலம் தொடர்ந்து நான்காவது முறையாக அஜித் - இயக்குநர் சிவா கூட்டணி இணைந்துள்ளது. ‘விவேகம்’ படத்தை தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் 15 ஆம் தேதி தொடங்க உள்ளது.
இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயந்தாராவை ஒப்பந்தம் செய்துள்ள படக்குழு, இசையமைப்பாளராக டி.இமானை ஒப்பந்தம் செய்துள்ளது. முதலில், இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைப்பதாக இருந்தது. பிறகு அவருக்கு பதிலாக ஷாம் சி.எஸ் அல்லது அனிருதை இசையமைப்பாளராக்க பரிசீலித்து வந்த நிலையில், டி.இமான் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜய் படத்திற்கு இசையமைத்திருக்கும் டி.இமான், ‘விஸ்வாசம்’ மூலம் முதல் முறையாக அஜித் படத்திற்கு இசையமைக்கிறார். அத்துடன், ‘டிக் டிக் டிக்’ படத்தின் மூலம் 100 படங்களை கடந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...