தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக உள்ள சமந்தாவுக்கு, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் திருமணம் நடைபெற்றது. தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் நாகர்ஜுனாவின் மகனும் நடிகருமான நாக சைதன்யாவை அவர் திருமணம் செய்துக் கொண்டார்.
திருமணத்திற்கு பிறகு தொடர்ந்து நடித்து வரும் சமந்தா, ’ரங்காஸ்தலம்’, ‘மகாநதி’ ஆகிய தெலுங்குப் படங்களிலும், விஷாலின் ‘இரும்புத்திரை’ ஆகிய படங்களிலும் நடித்து முடித்துவிட்ட நிலையில், தற்போது சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார்.
தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் சமந்தா பிஸியாக நடித்து வருவது போல, அவரது கணவர் நாக சைதன்யாவும் பிஸியாக நடித்து வருகிறார். இதனால், இவர்கள் இன்னும் ஹனிமூனுக்கு செல்லவில்லை.
இந்த நிலையில், சமந்தா தனக்கு கிடைத்திருக்கும் சில நாட்கள் விடுமுறையை தென்காசியில் கழிக்க இருக்கிறாராம். ஹனிமூன் செல்லவில்லை என்றாலும், தென் காசியில் விடுமுறையை மகிழ்ச்சியாக கழிக்க முடிவு செய்துள்ள சமந்தாவுடன் நாக சைதன்யா போகவில்லையாம். ‘ஷைலஜா ரெட்டி அல்லுடு’ என்ற தெலுங்குப் படத்தில் நாக சைதன்யா பிஸியாக இருப்பதால், சமந்தா மட்டும் தென்காசியில் சுற்றிப்பார்த்து சில நாட்கள் தங்கி ஓய்வு எடுக்க உள்ளாராம்.
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...